TN 12th Exam: பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு: என்ன நடவடிக்கை?

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் 3 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக,  அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Continues below advertisement

பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற ஆங்கிலத் தேர்வில் 3 பேர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக,  அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேள்வி எழுந்துள்ளது. 

Continues below advertisement

கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன. 

இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், கடந்த மே 5ஆம் தேதி மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கின. தேர்வை 8,37,311 மாணவர்கள் எழுதுகின்றனர். இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இந்த சூழலில், இன்று (மே 9) ஆங்கில மொழிப் பாடத் தேர்வு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. இதில் 3 தேர்வர்கள் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டுள்ளதாக, அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் மாணவர்கள் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டுள்ளனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


பிற பொதுத் தேர்வுகள் எப்போது?

இதற்கிடையே மே 6-ம் தேதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்kiyaது. இந்தத் தேர்வை 9,55,139 பேர் எழுதுகின்றனர். மே 10-ம் தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்தத் தேர்வை 8,85,053 மாணவர்கள் எழுத உள்ளனர். 

என்ன நடவடிக்கை?

பொதுத் தேர்வுகளில் காப்பி அடித்தால், அடுத்த ஓராண்டுக்கு தேர்வெழுதத் தடை விதிக்கப்படும். தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தால், அடுத்து தேர்வு எழுத வாழ்நாள் தடை விதிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola