பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை நாய்கள் தின்று கொண்டிருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் பஸ்தி ஜோதே வால் ( Basti Jodhewal) பகுதி நூர்வாலா ரோட்டில் பெண் சடலம் ஒன்றை நாய்கள் கூட்டமாக தின்று கொண்டிருந்ததாகத் தெரிகிறது. விசாரணையில் அந்த பெண் காணாமல் போய் ஆறு நாட்கள் ஆனது தெரிய வந்தது. அதைப் பார்த்த மக்கள் பயந்து ஓடியுள்ளனர். மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட அந்தப் பெண் பஸ்தி ஜோதேவால் பகுதியை சேர்ந்த குடி தேவி (45) என்பது தெரியவந்தது.
அவரது மகள் பயல், குடி தேவியின் கழுத்தில் அணிந்திருந்த செயினை வைத்து இதனை கண்டுபிடித்துள்ளார். இது குறித்து அவரது மகள் பாயல் கூறும்போது, “எனது தாய் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார். கடந்த 18 ஆம் தேதி வழக்கம் போல் தொழிற்சாலைக்கு பணிபுரிய சென்றவர், வீட்டிற்கு திரும்பவில்லை.” என்று கூறினார். இதனையடுத்து தாயை பல இடங்களில் தேடிய மகள், பஸ்தி ஜோதேவால் காவல் நிலையத்தில் தாய் காணாமல் போனது குறித்து புகார் அளித்துள்ளார்.
இது குறித்து பஸ்தி ஜோதேவால் பகுதி இன்ஸ்பெக்டர் லப் சிங் கூறும்போது, “பிரேத பரிசோதனை அறிக்கைக்காக நாங்கள் காத்துக்கொண்டிருக்கிறோம். குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) பிரிவு 174 இன் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளன. அந்தப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்