பிரபல சன் மியூசிக் தொகுப்பாளரும், சினிமா நடிகருமான ஆனந்த கண்ணன் மரணம் அடைந்தார். 


சிங்கப்பூர் தமிழரான இவர், சன் டிவியில் சிந்துபாத் என்ற நெடுந்தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தனியார் இசை தொலைக்காட்சி தொடங்கப்பட்ட காலத்தில், குழந்தைகள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமானவராக திகழந்தார்.  





ஆனந்த கண்ணன் மறைவுக்கு, திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ,"சிறந்த நண்பரும், சிறந்த மனிதருமான ஆனந்த கண்ணன் இன்று இல்லை. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும். எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார். 


IND vs ENG, 2 Test Highlights: ‛டெஸ்ட் அதிலும் பெஸ்ட்’: 7 ஆண்டுகளுக்கு பின் லார்ட்ஸில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா!


புற்று நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன், உடல் நலத்தில் முன்னேற்றம் இல்லாமல் நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார். ஆனந்த கண்ணனின் மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது திடீர் மரணம், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






சிங்கப்பூரைச் சேர்ந்தவராக இருந்தாலும், இந்தியாவை மிகவும் நேசித்த அவர், எப்போதும் இந்தியா வருவதை விரும்புவதாக ஆனந்த கண்ணன் ஒரு நேர்காணலின்போது தெரிவித்துள்ளார். குடும்பத்தை பற்றிய தகவல்களை பெரிதாக பகிர்ந்து கொள்ளாத அவருக்கு, திருமணமாகி ஒரு பெண் குழந்தையும், ஒரு வளர்ப்பு மகனும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.






தமிழ்நாட்டில், தமிழ் மீடியாவில் மிகவும் பிரபலமாக இருந்த அவர், தன்னுடைய குடும்பத்திற்காகவே மீண்டும் வெளிநாடு சென்றுவிட்டதாகவும் தெரிவித்திருந்தார். அவர் தமிழ் தொலைக்காட்சிகளில் பங்கேற்காதபோதும், அவருக்கான தனி ரசிகர் பட்டாளம் எப்போதும் இருந்தது குறிப்பிடத்தக்கது. நாட்டுபுறக்கலைகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த அவர், பலருக்கு அது தொடர்பான பயிற்சிப் பட்டறைகளின் மூலம் பயிற்சி கொடுத்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தொகுப்பாளர் பணியை விட வருமானம் குறைவாக இருந்தாலும், நாட்டுப்புற கலைகளுக்கான பயிற்சி அவருக்கு கூடுதலான மன நிம்மதியை அளித்ததாக அவர் ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது


Afghanistan Crisis: இந்தியர்களை மீட்க காபூலுக்கு விரைந்தது C-17 ரக இந்திய விமானப்படையின் விமானம்..!