Erode East Bypoll 2023 Result: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் தேமுதிகவை பின்னுக்குத்தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தில் உள்ளது.
ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 27ஆம் நடைபெற்றது. மொத்தம் 238 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 74.79 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலில், இத்தொகுதியில் 69.58% வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தேர்தலில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வந்தனர். இதனால் மாலை 6 மணிக்கு மேலும் டோக்கன் வைத்திருந்த மக்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். வாக்குப்பதிவுக்கு பின் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்டவை முறையாக சீல் வைக்கப்பட்டு, போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.
சீல் வைக்கப்பட்ட அனைத்தும் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டது. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட அனைத்து இயந்திரங்களும் பத்திரமாக காப்பு அறையில் வைக்கப்பட்டது. இதையடுத்து சித்தோடு அரசு பொறியியல் கல்லூரி, சிசிடிவி கேமிராக்கள் மூலமும் பாதுகாப்பு படையினராலும் கண்காணிக்கப்பட்டு வந்தது.
இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. துணை ராணூவப்படையினர், ஆயுதம் ஏந்திய பாதுகாப்பு படையினர், காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் சித்தோடில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி எலவுமலை, சுண்ணாம்பு ஓடை உள்ளிட்ட பகுதிகளில் 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கி விருவிருப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 19,964, அதிமுக - 7,412, நாம் தமிழர் -1,321, தேமுதிக - 194 வாக்குகள் பெற்றுள்ளனர். காங்கிரஸ் கட்சி அதிக வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறது. அதேபோல் இரண்டாம் இடத்தில் 7 ஆயிரம் வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும், ஆயிரம் வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்திலும் உள்ளது. பல்வேறு சர்ச்சைகள் எழுந்த நிலையில் நாம் தமிழர் கட்சி தேமுதிகவை பின்னுக்குத்தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.