Erode East By Election Result LIVE: 65 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வெற்றி..!
Erode East By Election Result 2023 LIVE Updates: கடந்த ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது.
கீர்த்தனாLast Updated: 02 Mar 2023 08:51 PM
Background
Erode East By-Election Result 2023 LIVE Updates:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய...More
Erode East By-Election Result 2023 LIVE Updates:ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் வெற்றி பெறப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், மத்திய அமைச்சர், மூத்த தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈவெரா (46). இவர் கடந்த 2021ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 41 ஆண்டுகளுக்கு பிறகு ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று சட்டப்பேரவைக்கு திருமகன் ஈவெரா சென்றார். இதையடுத்து கடந்த ஜனவரி 4ஆம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் உயிரிழந்தார். தொடர்ந்து ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதாவது பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தலும் நடைபெற்றது. காலை 7.30 மணிக்குத் தொடங்கிய தேர்தல் இரவு 9.30 மணிவரை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ தென்னரசு போட்டியிட்டார்.இந்தத் தேர்தல் எவ்வித சலசலப்புமின்றி அமைதியான முறையில் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்தலில் 74.78 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், நாளை (மார்ச்.02) ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறதுகாலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடகியது, ஏராளமான காவல் துறையினர் வாக்கு எண்ணும் மையத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தேர்தல் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த ஆட்சியின் வெற்றி! கழகத்தின் வெற்றி! - முதலமைச்சர் அறிக்கை..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதையொட்டி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், இது ஈரோடு கிழக்கு தொகுதியின் வெற்றி மட்டுமல்ல இந்த ஆட்சியின் வெற்றி கழகத்தின் வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 65 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இதனை அடுத்து திமுக அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வீடு வீடாகச் சென்று மக்களுக்கு நன்றி கூறியுள்ளனர்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், தூத்துகுடி பாராளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி, அமைச்சர்கள் பொன்முடி, பெரியசாமி, நேரு ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் குவிந்து வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த 10ஆயிரத்து 804 மக்களுக்கும் நன்றி. எங்களின் உணர்வுக்காக வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்திக் கொள்கிறேன் என நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா கூறியுள்ளார். மேலும், நாம் தமிழர் பெற்ற வாக்குகள் என்பது மக்களுக்கு கிடைத்த வெற்றி எனவும் கூறியுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கோமதி போட்டியிட்டு 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்றார். ஆனால் இம்முறை நடைபெற்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேனகா 10 ஆயிரத்து 804 வாக்குகளை பெற்றுள்ளார். இது பொதுத் தேர்தலை விட 825 வாக்குகள் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி என அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 66 ஆயிரத்து 575 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவர் மொத்தம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 556 வாக்குகள் பெற்றார். இரண்டாவது இடத்தில் அதிமுகவின் வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்றுள்ளார். இதற்கு அடுத்த இடத்தில் நாம் தமிழர் கட்சியின் மேனகா வாக்குகள் 8,474 பெற்றும், தேமுதிகவின் ஆனந்த் 1,177 வாக்குகள் பெற்றுள்ளனர். நாம் தமிழர் மற்றும் தேமுதிக டெபாசிட் இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று இருந்தார். தற்போது நடைபெற்றுள்ள இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசு யுவராஜை விட 15 ஆயிரம் வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
1 லட்சம் வாக்குகளைக் கடந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 907 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். இது இரண்டாவது இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளரை விடவும் 63 ஆயிரத்து 241 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.
14வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் 97 ஆயிரம் வாக்குகள் பெற்று, 1 லட்சம் வாக்குகளை நெருங்கி வருகிறார்.
55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை..!
முதல் சுற்றில் இருந்தே முன்னிலை பெற்று வரும் காங்கிரஸ் கட்சி, 12வது சுற்று முடிவில் 91 ஆயிரத்து 66 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளரை விடவும் 55 ஆயிரத்து 534 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். அதிமுக தற்போது வரை 35 ஆயிரத்து 532 வாக்குகள் பெற்றுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை - புகழேந்தி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவுகள் மூலம், எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை என்பது தெரிகிறது என ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளார் புகழேந்தி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
வாக்குப்பதிவு தினத்தில் இரவு 9.30 மணிவரை வாக்குப்பதிவு நடைபெற்ற ராஜாஜிபுரம் வாக்குச் சாவடியில் பதிவான வாக்குகளில் காங்கிரஸ் கட்சிக்கு 1,011 வாக்குகள் கிடைத்துள்ளது. அதிமுக அங்கு 226 வாக்குகள் தான் பெற்றுள்ளது.
தடைபட்ட இணைய சேவையால் வாக்கு எண்ணிக்கை பாதிப்பு ஏற்பட்டது. இதனால் முடிவுகளை அறிவிக்க கால தாமதம் ஆனது. இதனை ஈடு செய்ய கூடுதல் கணினிகள் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் உதயநிதியை அமைச்சர் செந்தில் பாலாஜி சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளதாவது, “மதிநுட்ப பிரச்சாரத்தால், மக்கள் மனம் கவர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்கு வித்திட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியை இன்று சந்தித்து நன்றிகளையும் வாழ்த்துகளையும் கூறிய போது” என குறிப்பிட்டுள்ளார்.
சொந்த வார்டிலேயே குறைந்த வாக்குகளைப் பெற்ற தென்னரசு..!
அதிமுக வேட்பாளர் தென்னரசுவின் சொந்த வார்டான சொக்காய் தேட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளரைவிட 271 வாக்குகள் குறைவாகப் பெற்றுள்ளார். அந்த வார்டில் இளங்கோவன் 463 வாக்குகளும் தென்னரசு 192 வாக்குகள் பெற்றுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டு இருக்கும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மக்களின் முடிவை ஏற்கிறோம் என பேசியுள்ளார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 9வது சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரம்.
காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் 70 ஆயிரத்து 299 வாக்குகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்த படியாக அதிமுக வேட்பாளர் தென்னரசு 24 ஆயிரத்து 985 வாக்குகள் பெற்று அடுத்த இடத்தில் உள்ளார். 9வது சுற்று முடிவில் இளங்கோவன் 45 ஆயிரம் வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - உணவு இடைவேளைக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - உணவு இடைவேளைக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 45 நிமிட உணவு இடைவேளைக்கு பிறகு 8வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
Erode East By Election Result Live : "நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன்” - முதல்வர் ஸ்டாலின்
நான் ஏற்கனவே தேசிய அரசியலில்தான் இருக்கிறேன். யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதே திமுகவின் கொள்கை முடிவு என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : "இளங்கோவனுக்கு மாபெரும் வெற்றி” - முதலமைச்சர் ஸ்டாலின்
வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர். திராவிட மாடல் ஆட்சியை சிறப்போடு நடத்த வேண்டும் என்று மக்கள் ஆதரவை வழங்கியுள்ளனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : "நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்”
நாடாளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள். அயராத உழைத்த அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், கூட்டணி கட்சியினருக்கு நன்றி என்று முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் பேட்டி அளித்துள்ளார்.
Erode East By Election Result Live : ”இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றி தான்" - அமைச்சர் அன்பில் மகேஸ்
”முதலமைச்சரின் சாதனைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில் தேர்தல் முடிவுகள் வந்துள்ளது. இது நாங்கள் எதிர்பார்த்த வெற்றி தான்" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் - 66.7%, அதிமுக - 23.8%
ஈரோடு கிழக்கு தொகுதியில் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் காங்கிரஸ் 66.7%, அதிமுக 23.8% பெற்றுள்ளன. ஈவிகேஎஸ் இளங்கோவன் 53,735 வாக்குகளும், தென்னரசு 20,041 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
Erode East By Election Result Live : உணவு இடைவேளை - வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை உணவு இடைவேளைக்கு பிறகு, பகல் 1.45 மணிக்கு தொடங்க உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் இதுவரை 7 சுற்றுகள் முடிவடைந்துள்ளன.
Erode East By Election Result Live : ”20 மாத ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்" - அமைச்சர் சாமிநாதன்
”ஈரோடு கிழக்கு தொகுதியில் மகத்தான வெற்றி என்ற சூழல் உள்ளது. நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக வாக்குகள் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை தருகிறது. இது முதலமைச்சரின் 20 மாத ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம்" என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : தபால் வாக்கு எண்ணிக்கை - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரோடு கிழக்கில் பதிவான 398 தபால் வாக்குகளில் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு 250 வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுகவின் தென்னரசுவுக்கு 104, நாம் தமிழர் கட்சிக்கு 10, தேமுதிகவுக்கு ஒரு தபால் வாக்கு கிடைத்தது.
Erode East By Election Result Live : ”80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" - திருமாவளவன்
"ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இந்த வெற்றி, திமுக மதச்சார்பற்ற கூட்டணிக்கு மக்கள் கொடுத்த வெற்றியாகும்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 6வது சுற்று முடிவில் ஈவிகேஎஸ் இளங்கோவன் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை உள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 6வது சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 46,116 அதிமுக - 16,778, நாம் தமிழர் -3,061, தேமுதிக - 1,017 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : முதலமைச்சரை சந்தித்து அமைச்சர்கள் வாழ்த்து
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ஈரோடு இடைத்தேர்தல் - 6வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 5வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளரை விட ஈவிகேஎஸ் இளங்கோவன் 26,177 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Erode East By Election Result Live : ”மக்கள் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் பூர்த்தி செய்வார்" - அமைச்சர் முத்துசாமி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ”எதிர்கட்சிகள் வைத்த குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்பதை மக்கள் இன்று பதிலளித்துள்ளனர். மக்கள் கொடுத்துள்ள இந்த வெற்றி மூலம் மேலும் மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை செயல்படுத்துவோம். மக்கள் எதிர்பார்ப்புகளை முதலமைச்சர் பூர்த்தி செய்வார்" என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 26 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 4ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 39,692 அதிமுக - 13,514, நாம் தமிழர் -2,031, தேமுதிக - 1,017வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : "தொடர்ந்து முன்னிலை மட்டுமல்ல, கண்டிப்பாக வெற்றி பெறுவோம்” - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - ”தொடர்ந்து முன்னிலை மட்டுமல்ல, கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இந்த வெற்றி நமது முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி" என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : அதிமுக வேட்பாளரை விட 2 மடங்கு அதிகம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்
ஈரோடு கிழக்கில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவை விட 2 மடங்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார் ஈவிகேஎஸ்.இளங்கோவன். தென்னரசு சுமார் 10 ஆயிரம் வாக்குகள் பெற்ற நிலையில், ஈவிகேஎஸ் 30 ஆயிரம் வாக்குகள் பெற்றுள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - தொடந்து காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 4ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 31,928 அதிமுக - 10,618, நாம் தமிழர் -1,481, தேமுதிக - 254 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 16 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 4ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 26,431 அதிமுக - 9,217, நாம் தமிழர் -1,481, தேமுதிக - 254வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 16,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 25,033 அதிமுக - 8,354, நாம் தமிழர் -1,819, தேமுதிக - 228 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 24,812 அதிமுக - 8,128, நாம் தமிழர் -1,479, தேமுதிக - 212 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : வெளியான முதல் சுற்று முடிவுகள்.. தேமுதிக வேட்பாளரை முந்திய சுயேட்சை..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முதல் சுற்றில் தேமுதிக வேட்பாளரை விட சுயேட்சை அதிமுக ஓட்டு பெற்றுள்ளார். முதல் சுற்றில் தேமுதிகவின் ஆனந்த் 112 வாக்கு பெற்ற நிலையில் சுயேட்சை முத்துபாவா 178 வாக்கு பெற்றுள்ளார்.
Erode East By Election Result LIVE: முதல் சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமான வெளியானது..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் முதல் சுற்று முடிவுகளை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. முதல் சுற்றில் காங்கிரஸ் - 8429, அதிமுக - 2873, நாம் தமிழர் - 526, தேமுதிக-112 வாக்குகள் பெற்றுள்ளன.
Erode East By Election Result Live : தேர்தல் முடிவுகள் தாமதம் ஏன்? - விளக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வெளிப்படைத்தன்மையோடு வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கையையும் முழுமையாக சரிபார்த்து அறிவிப்பதால், காலதாமதம் ஏற்படுகிறது என ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுன்னி தெரிவித்துள்ளார்.
Erode East By Election Result Live : செய்தியாளர்கள் போராட்டம் - ஈரோடு ஆட்சியர் பேச்சு
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிவை அறிவிக்க அதிகாரிகள் தாமதிப்பதால் செய்தியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செய்தியாளர்களுடன், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுன்னி பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - செய்தியாளர்கள் போராட்டம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - வாக்கு எண்ணும் மையத்திற்குள் செய்தியாளர்களை அனுமதிக்க காவல்துறையினர் மறுப்பு. வாக்கு எண்ணும் மையத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 3ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 19,964, அதிமுக - 7,412, நாம் தமிழர் -1,321, தேமுதிக - 194 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - மூன்றாம் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடக்கம்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. இரண்டாம் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து மூன்றாம் சுற்று தொடங்கியுள்ளது.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - அபார வெற்றியை நோக்கி காங்கிரஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 2ஆம் சுற்று வாக்கு எண்ணிக்கையிலேயே கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வித்தியாசத்தை விட அதிக வாக்கு வித்தியாசம் பெற்றுள்ளார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 12 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 2ஆம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 17,417, அதிமுக - 5,598, நாம் தமிழர் - 642, தேமுதிக - 108 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - 10 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். இரண்டாம் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 14,631, அதிமுக - 4761, நாம் தமிழர் - 640, தேமுதிக - 107 வாக்குகள் பெற்றுள்ளனர்
ஈரோடு கிழக்கில் மகத்தான வெற்றியை பெறுவோம்- கே.எஸ். அழகிரி
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெறும். முதலமைச்சர் ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. அதிமுக சஞ்சலத்தில் உள்ளதாவும் சென்னை நுங்கம்பாக்கத்தில் காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டியளித்தார்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - 2வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததை அடுத்து இரண்டாம் சுற்று தொடங்கியுள்ளது.
ஈரோடு இடைத்தேர்தல் - 7,500 வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 11,023, அதிமுக - 3,849 நாம் தமிழர் - 632, தேமுதிக - 102 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - 7,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 10,952, அதிமுக - 3,800, நாம் தமிழர் - 615, தேமுதிக - 99 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - 6,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்.முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 9,786, அதிமுக - 3613, நாம் தமிழர் - 368, தேமுதிக - 73 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - 4,500 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 7,418, அதிமுக - 2849, நாம் தமிழர் - 316, தேமுதிக - 62 வாக்குகள் பெற்றுள்ளனர்
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - 3,600 வாக்குகள் வித்தியாசத்தில் ஈ.வி.கே.எஸ் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 5,629, அதிமுக - 1,688, நாம் தமிழர் - 288 தேமுதிக - 58 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Erode East By Election Result Live : ஈராடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி காங்கிரஸ் - 4,707 அதிமுக - 1,478, நாம் தமிழர் - 83, தேமுதிக - 58 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி இளங்கோவன் - 3,785, தென்னரசு - 1,472 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Erode East By Election Result Live : ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - காங்கிரஸ் முன்னிலை
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்படி காங்கிரஸ் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். முதல் சுற்று நிலவரப்படி இளங்கோவன் - 1,374, தென்னரசு - 447 வாக்குகள் பெற்றுள்ளனர்.
Erode East By Election Result Live : ஈரோடு இடைத்தேர்தல் - முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பதிவான மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையில் உள்ளேயும் வெளியேயும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காவல்துறையினர் மற்றும் துணை ராணுவத்தினர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு 27ஆம் தேதி நடைபெற்றது. 77 வேட்பாளர்கள் போட்டியிட்டதால் 5 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. மொத்தம் 74.79 சதவீதம் வாக்குப் பதிவு நடைபெற்றிருந்தது. வாக்குப்பதிவு நிறைவடைந்த உடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு சித்தோடு ஐஆர்டிடி பொறியல் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை அடுத்து அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் மற்றும் சுயேச்சைகள் என 77 பேர் போட்டியிட்டனர்.
Erode East By Election Result LIVE: வெற்றிச் சான்றிதழ் பெறும் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்
தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அனுமதிக்கப்பட வேண்டியவர்கள் குறித்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதே போல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி வெற்றி பெற்ற வேட்பாளருக்கு சான்றிதழ் வழங்கப்படுவது வரை தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Erode East By Election Result LIVE: பாதுகாப்புப் பணியில் 750 காவலர்கள்!
வாக்கு எண்ணும் மையத்தில் காவல் துறையினர் 750 பேரும், இரண்டு குழுக்களாக சிஆர்பிஎஃப் வீரர்களும், துணை ராணுவப் படையினரும், சிறப்பு காவல் பிரிவினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Erode East By Election Result LIVE: 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை
முதலில் தபால் வாக்குகளும், பின்னர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் பிரித்து 15 சுற்றுகள் வரை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
Erode East By Election Results LIVE: 2 அறைகளில் 16 மேஜைகள்...
வாக்குப் பதிவு இயந்திரங்கள் சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் சீல் வைக்கப்பட்டு மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று (மார்ச்.02) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதற்காக 2 அறைகளில் 16 மேஜைகள் போடப்பட்டுள்ளன.