கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் உணவுத்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் காமராஜ். அவர் கடந்தகால ஆட்சியில் அமைச்சராக பொறுப்பு வகித்ததில் உணவுத்துறைக்காக எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து, இன்று காலை முதல் முன்னாள் அமைச்சர் காமராஜூக்கு சொந்தமான வீடு, அலுவலகம் என 49 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் அமைச்சர் காமராஜ் மட்டுமின்றி அவரது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
காமராஜின் வீடு மற்றும் அலுவலகங்கள் மட்டுமின்றி அவரது இரண்டு மகன்களாகிய டாக்டர் இன்பன் மற்றும் டாக்டர் இனியன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். காமராஜ் மற்றும் அவரது மகன்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வரும் நிலையில், தஞ்சை பூக்கார வஸ்தா தெருவில் உள்ள காமராஜின் சம்பந்தியாக டாக்டர் மோகன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.
இது மட்டுமின்றி காமராஜின் உறவினர்கள் மற்றும் நண்பர்களாகிய சந்திரசேகரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் உதயகுமார் ஆகியோரது வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை, திருச்சி, தஞ்சை மற்றும் திருவாரூர் ஆகிய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சோதனை தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 58 கோடியே 44 லட்சத்து 38 ஆயிரத்து 252 ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் அமைச்சர் காமராஜ், அவரது இரு மகன்கள், அவரது சம்பந்தி உள்பட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வரும் நிலையில், காமராஜின் ஆதரவாளர்கள் அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ளனர்.
மேலும் படிக்க : பதவியை தவறாக பயன்படுத்தி ரூ.58 கோடியை அபேஸ் செய்த முன்னாள் அமைச்சர்: எஃப்.ஐ.ஆரில் இருப்பது என்ன?
மேலும் படிக்க : வருமானத்துக்கு அதிகமாக சொத்து? - முன்னாள் அமைச்சர் காமராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்