புதுச்சேரி அருகே வீடியோ பதிவு செய்துவிட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடியோவில் என் தற்கொலைக்கு காரணம் காவலர், மற்றும் பெண் ஒருவர் என பதிவு செய்துள்ளார்.


புதுச்சேரியை அடுத்த வில்லியனூர் கூடப்பாக்கம் பகுதியில் சேர்ந்தவர் பாபு, இவர் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் 17 வயதான விஷ்ணுகுமார் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மார்ச் மாதம் பைக் எடுத்துக்கொண்டு பத்துகண்ணு பகுதிக்கு சென்ற விஷ்ணுகுமார் மொபெட் பைக் மீது மோதியதில் ஒரு பெண்ணுக்கு காலில் அடிபட்டுள்ளது. அந்த பெண் வில்லியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.


மது போதை....குடும்ப பிரச்னை - அடுத்தடுத்து தந்தை, மகன் தற்கொலை... நடந்து என்ன ?


புகாரின் அடிபடையில் வில்லியனூர் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் இரு தரப்பையும் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். பேச்சு வார்த்தைக்கு காயம் பட்ட பெண் உடன்படாததால் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த விபத்து வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் இருந்து பாபுவின் வீட்டிற்கு மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு சம்மன் வந்துள்ளது. மூன்று லட்சத்தை எப்படி நாம் கொடுக்க முடியும் என்று இரண்டு நாட்களாக மன உளைச்சலில் விஷ்ணுகுமார் இருந்து வந்துள்ளார்.


இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி பெற்றோர்கள் வேலைக்கு சென்றவுடன் வீட்டில் தனியாக இருந்த விஷ்ணுகுமார் எலிமருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்துள்ளார். மயங்கிய நிலையில் வீட்டிற்குள் கிடந்த விஷ்ணு குமாரை உடனடியாக ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், அங்கு சிகிச்சையில் இறந்த விஷ்ணுகுமார் இறந்துவிட்டார்.



விஷ்ணுகுமார் இறப்பதற்கு முன்பு தனது செல்போனில் இறப்பதற்கான காரணங்கள் குறித்து பேசிய உருக்கமான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. “பெண்ணின் வாகனம் மீது எனது கால்தான் உரசியது. நான் பெரிய விபத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் அதை பெரிதுபடுத்தி வழக்கு பதிவு செய்து பணம் கேட்கிறார்கள். எனது இறப்பிற்கு வில்லியனூர் போக்குவரத்து போலீசார் மற்றும் புகார் கொடுத்தவர்கள் தான் காரணம். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வீடியோவை கூறியுள்ளார் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 


மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,சென்னை - 600 028.தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண