Nellai Rain:  திருநெல்வேலியில் வெள்ள நீர் வடியாத நிலையில், நாளை சில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 


வடியாத வெள்ள நீர்:


திருநெல்வேலியில் 1992ஆம் ஆண்டு ஏற்பட்டதை போல, பெருமழையும், வெள்ளப்பெருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. 1992ஆம் ஆண்டை விட தற்போது பாதிப்பு அதிகமாக உள்ளது.  குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 தினங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் இடைவிடாது 24 மணி நேரத்தையும் தாண்டி அதிக கனமழை பெய்தது. இதனால், அனைத்து இடங்களையும் வெள்ளம் சூழந்தது.


தற்போது, நெல்லை, தூத்துக்குடியில் மழையின் அளவு குறைய தொடங்கியுள்ளது. முழுவதுமாக இல்லாவிட்டாலும் பெரிய அளவில் மழை இல்லாத நிலையில் நகரின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியத் தொடங்கியுள்ளது. இருப்பினும், வெள்ளத்தால் போக்குவரத்து சேவையும், ரயில் சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தண்டவாளங்கள் சேதம் அடைந்துள்ளதால் தென் மாவட்டங்களில் ரயில் போக்குவரத்து சேவை முடங்கியுள்ளது.


ஸ்ரீவைகுண்டம் அருகே தண்டவாளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, தண்டவாளம் தொங்கிய நிலையில் உள்ளது.  இதனால், ரயில்வே ஊழியர்களும், மாவட்ட நிர்வாகமும் மீட்பு பணியில் முழு வீச்சில் இறங்கியுள்ளது.  நெல்லை ரயில் நிலையத்தில் தேங்கி உள்ள மழைநீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்றப்பட்டு வருகிறது.  


ரயில் சேவை ரத்து: 


இந்நிலையில், தண்டாவளத்தில் மழைநீர் தேங்கியுள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை நெல்லை ரயில் நிலையம் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதோடு இல்லாமல் சில ரயில்களையும் ரத்தும் செய்துள்ளது தெற்கு ரயில்வே.  






அதன்படி, நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் இருமார்க்கங்களிலுத் ரத்து செய்யப்படுகிறது. நெல்லை - தாதர் விரைவு ரயில் (22630) பகுதி ரத்து செய்யப்பட்டு, நாளை மதுரையில் இருந்து புறப்படும்.  திருச்செந்தூர் - எழும்பூர் ரயில் (20606) நாளை கோவில்பட்டியில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 




மேலும் படிக்க


10th Exam: 10ஆம் வகுப்பில் 29.5 லட்சம் மாணவர்கள் தோல்வி; ஆண்டுதோறும் அதிகரிக்கும் எண்ணிக்கை- மத்திய அரசு அதிர்ச்சித் தகவல்!


CM Stalin On Governor: ”தமிழ்நாடு ஆளுநரின் செயலுக்கு இதுதான் என் ரியாக்‌ஷன்” - டெல்லியில் முதலமைச்சர் ஸ்டாலின் பளிச் பதில்