விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு திமுக வேட்பாளர் மாரடைப்பால் மரணம் அடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வத்திராயிருப்பு பேரூராட்சி இரண்டாவது வார்டு திமுக வேட்பாளர் முத்தையா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 45. அவரின் மரணத்தால் அங்குள்ள திமுகவினர் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.


தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி அரசியல் கட்சி மற்றும் சுயேட்டை வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.




மேலும் படிக்க: MK Stalin : ’ஜெயிச்சுட்டுதான் அறிவாலயம் பக்கம் வரனும்’ மாவட்ட செயலாளர்களை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த முதல்வர் மு.க. ஸ்டாலின்..!


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது.இந்த பேரூராட்சியில் 14 ஆயிரத்து 348 வாக்காளர்கள் உள்ளன.இந்நிலையில் இந்த பேரூராட்சி 2வது  வார்பில் திமுக சார்பில் கனி (எ) முத்தையாவும், அதிமுக சார்பில் கருப்பையாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் திமுக வேட்பாளர் முத்தையா (54) தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் நேற்று மாலையும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.


முத்தையாவிற்கு நள்ளிரவில் ஒரு மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை உறவினர்கள் வத்திராயிருப்பு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் கனி (எ)  முத்தையா உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுக அரசியல் கட்சியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வத்திராயிருப்பு பேரூராட்சி 2 ஆவது திமுக வேட்பாளர் உயிரிழந்ததன் காரணமாக அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது.




TN Urban Local Body Election News LIVE: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்.. நூதனமான, தீவிரமான பரப்புரையில் வேட்பாளர்கள்..




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிட்பில் வீடியோக்களை காண