Senthil Balaji Arrest LIVE: செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா? - காவேரி மருத்துவமனையில் அனுமதி..!
Senthil Balaji Arrest LIVE Updates: செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தடுத்த நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் பார்க்கலாம்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் அமலாக்கத்துறை முன்பு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கோரிய வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு விரைவில் பை - பாஸ்அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக, மருத்துவமனை அறிவித்துள்ளது. இது குறித்து தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய அறுவை சிகிச்சை செய்யப்படவேண்டும் எனவும், அதற்கு அவரது உடல்நிலை உள்ளதா என பரிசோதித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை ஆய்வு செய்ய எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவர்கள் அடங்கிய குழு இன்று சென்னை வருகிறது
முதலமைச்சர் சவாலுக்கு பதில் சவால் விடுகிறேன், முடிந்தால் தொண்டர்கள் மீது கை வைத்துப் பாருங்கள் - மதுரையில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, ஆளுநரை நேரில் சந்தித்து அதிமுக தரப்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது
அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அமைச்சரின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நிஷா பானு, மற்றும் பரத சக்ரவர்த்தி அமர்வு உத்தரவு. இதையடுத்து வழக்கு விசாரணை ஜுன் 22ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு, ஜாமின் மனு மீது விசாரணை நடத்தப்படும் என, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவு
அமைச்சரை தீவிரவாதிபோல அடைத்துவைத்து விசாரிக்கவேண்டிய அவசியம் என்ன? முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி
சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட செந்தில் பாலாஜி வழக்குகள் பிற்பகலுக்குள் ஒத்திவைப்பு - ஜாமின் மனு, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு, மருத்துவமனை மாற்றம் தொடர்பாக மனுக்கள் பிற்பகல் விசாரிக்கப்படுகிறது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு புழல் சிறையில் கைதி எண் 1440 வழங்கப்பட்டுள்ளது - புழல் சிறை நிர்வாகம்
நெஞ்சுவலியால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியை சந்திக்க அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுப்பு - குடும்பத்தினர் மட்டுமே சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜிக்கு விரைவில் இதய சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் - அமைச்சர் சேகர் பாபு
செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று இடத்தில் அடைப்புகள் கண்டறியப்பட்டதால் அறுவை சிகிச்சைக்குப் பரிந்துரை
செந்தில் பாலாஜி உடல்நிலை சீராக உள்ளது என மருத்துவர்கள் தகவல்
Minister Senthil Balaji : 'இலாகா இல்லாத அமைச்சராகும் செந்தில்பாலாஜி?’ இன்று வெளியாகிறதா அறிவிப்பு?
தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான அறிவிப்பு இன்று வெளியாகலாம் என கூறப்படுகிறது.
சிபிஐக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்ப பெற்றது தமிழ்நாடு அரசு
ரிமாண்ட் செய்யப்பட்டு விட்டதால் ஜாமின்தான் கேட்க முடியும். குறிப்பாணையை செந்தில் பாலாஜி வாங்கவில்லை - அமலாக்கத்துறை தரப்பு
கைதில் விதிமுறை பின்பற்றப்படவில்லை - செந்தில் பாலாஜி தரப்பு
கைதுக்கு முன் நோட்டீஸ் அளிக்கப்படவேண்டும் என விதிமுறை பின்பற்றப்படவில்லை - வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜூன் 28ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு.
சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி, அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு கைது நடவடிக்கை மேற்கொள்வதற்காக நீதிமன்றத்தில் இருந்து புறப்பட்டு வந்தடைந்தார்.
அமலாக்கத்துறை நடவடிக்கை : ஆம் ஆத்மி கண்டனம்
ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரிக்க நீதிபதி மருத்துவமனைக்கு நீதிபதி வந்துள்ளார். இதனால், திமுக வழக்கறிஞர்கள் மருத்துவமனையை முகாமிட்டுள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆரம்பகால உதவியாளார் கோகுல் என்பவரின், அபிராமிபுரத்தில் உள்ள வீட்டிற்கு வருமானவரித்துறையினர் சீல் வைத்துள்ளனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொண்ர்வு மனுவை விசாரிக்கவிருந்த உயர்நீதிமன்ற நீதிபதி சக்திவேல் விலகியுள்ளார்.
கர்நாடக தேர்தலில் தோல்வியை சந்தித்த பின்னர், பாஜகவிற்கு தோல்வி பயம் வந்து விட்டது, அதனால் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார் என டி. ராஜா கூறியுள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடலில் ரத்தக்குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பை - பாஸ் சார்ஜரி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடலில் ரத்தக்குழாயில் மூன்று இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே பை - பாஸ் சார்ஜரி செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர்களுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை - அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது சகோதரர் நடத்தி வரும் நிறுவன அலுவலகத்திற்கு அமலாக்கத்துறையினர் சீல் வைத்தனர்
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை நிறைவடைந்துள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜிக்கு ஆஞ்சியோ பரிசோதனை தொடங்கியுள்ளது.
செந்தில் பாலாஜியின் நலம் விசாரிக்க ஓமந்தூரார் மருத்துவமனைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வந்தார். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டபோது நெஞ்சுவலி வந்ததால், அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை அமைச்சர்கள் சந்தித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து விசாரிக்க மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அமைச்சர் செந்தில் பாலாஜியின் சொந்த ஊரான கரூரில் பாஜக அலுவலகம் மற்றும் பாஜக பிரமுகர்கள் வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியை காண்பதற்காக மருத்துவமனைக்கு அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்., சிவசங்கர், ரகுபதி ஆயோர் வந்துள்ளனர்.
செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அவரது இல்லத்தில் திமுக அமைச்சர்களும், திமுக மூத்த தலைவர்கள் அலோசனை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்றும், எந்த பழிவாங்கும் நடவடிக்கையையும் தி.மு.க. எதிர்கொள்ளும் என்றும் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்று மருத்துவமனை கூறியிருப்பதாவது தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ரத்த ஓட்டம் சீராக உள்ளது என்று மருத்துவமனை கூறியிருப்பதாவது தகவல்கள் வெளியாகியுள்ளது.
செந்தில்பாலாஜியால் பேச முடியவில்லை என்று அவரை நேரில் சந்தித்த அமைச்சர் நேரு தெரிவித்துள்ளார்.
Background
Senthil Balaji Arrest LIVE Updates:
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனைக்குப் பின் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி கைது:
முந்தைய அதிமுக ஆட்சியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அந்த துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பலரும் வழக்கு தொடர்ந்தனர். சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் நேற்று காலை முதல் அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு, தலைமைச்செயலகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடந்தனர். இதேபோல் செந்தில்பாலாஜியின் கரூர் வீடு உள்ளிட்ட 8 இடங்களிலும் சோதனையானது நடந்தது.
சுமார் 17 மணி நேரம் இந்த சோதனை நீடித்தது. தலைமைச்செயலகத்தில் நடந்த சோதனையின் போது 3 பைகளில் ஆவணங்கள் எடுத்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து அதிகாலை 2 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர். செந்தில் பாலாஜி விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டாரா அல்லது கைது செய்யப்பட்டாரா என்ற குழப்பம் நிலவிய நிலையில், அவர் கைது செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது.
மருத்துவமனையில் குவியும் அமைச்சர்கள்
இதற்கிடையில் அதிகாரிகள் அழைத்து செல்லும்போது செந்தில் பாலாஜிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் ஓமந்துராரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு துணை ராணுவத்தினரும், போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். செந்தில்பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதை அறிந்த அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி,எ.வ.வேலு, திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் நேரடியாக மருத்துவமனைக்கு வருகை தந்தனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -