தமிழ்நாட்டில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.


தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் தெரிவித்துள்ளது.


கட்டுப்பாடுகள்:



  • குறைந்த ஒலியுடனும் குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்

  • மருத்துவமனைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள்

  • அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்

  • குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.


பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.


இந்நிலையில், தீபாவளியன்று பாதுகாப்பாக பட்டாசு வெடித்து கொண்டாடுவதற்கு, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது.




இந்தியாவின் தலைநகரான டெல்லியில், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில், தீபாவளியன்று பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பட்டாசு வெடிப்பதற்கான தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Also Read: Diwali Special Buses: கிளம்ப தயாரா இருங்க..! தீீபாவளிக்கு 16, 888 சிறப்பு பேருந்துகள்..!


Also Read: SBI Credit Card: களைக்கட்டும் தீபாவளி ஆஃபர்! SBI Credit Card மூலம் பொருட்களை வாங்கினால் எக்கச்சக்க தள்ளுபடி !