தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இதன்படி, தமிழ்நாட்டில் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16 ஆயிரத்து 888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.