உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் கீழ் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு இரத்தசோகை அளவு கணக்கீடு அட்டையுடன் ஊட்டசத்து பெட்டகம் வழங்கி மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இரத்தசோகை தொடர்பான குறும்படத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் வெளியிட்டார்.
கரூர் மாவட்டம், குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் உதிரம் உயர்த்துவோம் திட்டத்தில் கிழ் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை கணக்கிட்டு அதற்கான அட்டையுடன் ஊட்டசத்து பெட்டகம் வழங்கி, மாணவி மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு இரத்தசோகை தொடர்பான குறும்படத்தினை வெளியிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் மாவட்டத்தில் உதிரம் உயர்த்துவோம் என்ற திட்டத்தில் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பில் பயிலும் வளரிளம் பெண்களான மாணவிகளுக்கு அவர்களுடைய இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை கணக்கிட்டு அதற்கு ஏற்ற சிகிச்சை அளிக்கக்கூடிய ஒரு உன்னதமான முன்னோடி திட்டத்தினை நம்முடைய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, நம்முடைய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் அவர்களுடைய வழிகாட்டுதலின்படியும் நடைபெற்றது. குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் இந்த திட்டத்தின் கீழ் பெண் குழந்தைகளுக்கு அவர்களுடைய இரத்தத்தின் அளவை பொறுத்து ஹீமோகுளோபின் அளவு ரொம்ப குறைந்த இரத்த சோகை இருந்தால் சிவப்பு நிற அட்டை வழங்கப்படுகிறது. கொஞ்சம் குறைவாக இருந்தாலும் மஞ்சள் அட்டையும், சரியான அளவு இருக்கும் குழந்தைகளுக்கு பச்சை அட்டையினையும் வழங்கி பெற்றோர்களை அழைத்து பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் இரத்தசோகை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கும், அவர்களுடைய குழந்தைகளுடைய ஹீமோகுளோபின் அளவை தெளிவுபடுத்தப்பட்டு அதுவும் குறிப்பாக இரத்த சோகை மிக அதிகமாக உள்ள குழந்தைகளுக்கு கரூர் அரசு மருத்துவக் கல்லூரியிலேயே மேல் சிகிச்சை அளிப்பதற்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் ஒரு சிறப்பு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இப்பொழுது நாம் 17000 மேற்பட்ட அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்களிடம் அனுமதி பெற்று இரத்தசோகை பரிசோதனை செய்து இந்த உதிரம் உயர்த்தும் திட்டத்தை அமல்படுத்தியிருக்கிறோம். இந்த திட்டத்தின் கீழ் நாம் எல்லா குழந்தைகளுக்கும் உரிய சிகிச்சை அளித்து அவர்களின் ஹீமோகுளோபின் அளவை சரியாக உயர்த்துவதற்கு தான் இந்த உதிரம் உயர்த்தும் என்ற திட்டம், இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தியதில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதற்கு இந்த திட்டத்திற்காக சிறப்பாக செயலாற்றிய நம்முடைய கரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் உடைய முதல்வர் மற்றும் மருத்துவர் குழு மற்றும் துணை இயக்குநர் மற்றும் பள்ளிகளில் சேர்ந்த முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுடைய சிறப்பு பங்களிப்பின் மூலம் இதுவரை இந்த திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு அடுத்ததாக பெற்றோர்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் மிக முக்கிய பங்கு உள்ளது இந்த திட்டத்தில் அவர்களையும் பங்காளர்கள் ஆக்கியுள்ளோம். மருத்துவர்களுடன் இணைந்து குழந்தைகளும், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இனி இந்த திட்டத்தில் இணைந்து முன்னெடுத்து செல்வார்கள்.
ALSO READ | Vani Jairam: மறைந்த பாடகி வாணி ஜெயராமின் கடைசி வீடியோ... சோகத்தில் திரைத்துறையினர்!
இந்த திட்டம் கரூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுவதன் மூலம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இது நாட்டிற்கு முன்னோடியாக விளங்கக்கூடிய திட்டம் ஏனெனில் இரத்தசோகை என்பது வளரிளம் வயதிலேயே சரி செய்யும் பொழுது அந்த குழந்தைகள் மிக ஆரோக்கியம் பெற்று எதிர் காலத்தில் அவர்களுடைய கல்வி, அனைத்து வகையிலும் சிறந்து விளங்குவார்கள். இது ஒரு மிக முக்கியமாக உன்னதமான ஒரு திட்டம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி முதல்வர் மரு.சீனிவாசன், துணைஇயக்குநர் .(சுகாதாரப்பணிகள்) மரு.சந்தோஷ்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.கீதா, தனித்துணை ஆட்சியர்(சபாதி) திரு.சைபுதீன், வருவாய் கோட்டாட்சியர் திருமதி.புஷ்பாதேவி, மரு.தெய்வநாதன், மரு.சுதர்சனயேசுதாஸ், மரு.ஏபில், மரு.வெற்றிச்செல்வன், தலைமையாசிரியர்.திருமதி.மஞ்சுளா மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.