கரூர் மாவட்டத்தில் பலத்த மழை


 


 




கரூர் மாவட்டத்தில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால், பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கரூர் நகர பகுதியில் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில் கரூர் கோவை ரோடு, ஜவகர் பஜார், வெங்கமேடு, காந்திகிராமம், தாந்தோணி மலை, பசுபதிபாளையம், ஆண்டாங் கோவில்,கரூர், செல்லாண்டிபாளையம், செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 5 மணி முதல் 5.30 மணி வரை பலத்த மழை கொட்டித்து விட்டது, பின்னர் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் சாலை ஓரங்களில் தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும் பலர் குடை பிடித்தபடி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். வேலாயுதம்பாளையம், மூலமங்கலம், காகிதபுரம், புகலூர், ஞானப்பரப்பு, தோட்டக்குறிச்சி, ஐயம்பாளையம்,  கடம்பன்குறிச்சி, மண்மங்கலம், ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. பல இடங்களில் மழைநீர் தேங்கின்றதை காண முடிகிறது. தோகைமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த நாள் பல்வேறு  பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றன. இதனால் சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்ய  முடியாமல் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு நஷ்ட ஈடு வழங்க கோரிக்கை வைத்துள்ளனர். நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், பாலத்துறை, புகழூர், அருவாபாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில்  மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டன . சாலைகளில் சென்ற வாகன விருத்திகளும் பொதுமக்களும் இணைந்து கொண்டே சென்றனர்.


 




 


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஒரு மாதத்திற்கு முன்னரே முடிவடைந்து விட்டது. தற்போது காலை நேரத்தில் வாட்டி வதக்கும் முறை பணி தான் மக்களை வாட்டி வதைக்கி வருகிறது. மேலும், ஆண்டுதோறும் பனிக்காலமான ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் ஓரளவு மலையை கரூர் மாவட்டம் பெற்று வந்தது. ஆனால் ஜனவரி மாதம் முழுவதும் கரூர் மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை. நிலையில் வங்கு கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருந்தது.


 




 


அதன்படி , கரூரை தவிர சில மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வந்தது. ஆனால் கரூர் மாவட்டத்தில் மட்டும் மழை பெய்யவில்லை. ஆனால், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் மூன்றாம் நாளான மாலை 4 மதியம் முதல் 5 மணி வரை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கரூர் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த திடீர் மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம்  சென்றதோடு, பல்வேறு வேலைகளுக்கு சென்ற பொதுமக்களும், இதனால் கடும் சிரமத்துக்கு உள்ளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.