முன்விரோத கொலைச் சம்பவங்களைத் தொடர்ந்து மாநில அளவில் எடுக்கப்பட்ட "Operation Disarm" என்னும் தேடுதல் வேட்டையில் சுமார் 3,325 கொலைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, கொலைச் சம்பவங்களுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் செய்யப்பட்டன. 1,110 கத்திகள் மற்றும் கள்ளத் துப்பாக்கிகள் பறிமுதல் 7 கத்தி. வீச்சரிவாள் போன்றவற்றை தயார் செய்யும் உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அனைவரையும் காவல் நிலைய உட்கோட்ட அளவில் அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டது.
இதை சற்று கவனிக்கவும் -*Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இவ்வாறு மொத்தம் 579 கூட்டங்கள் நடத்தப்பட்டதில் 2,548 நபர்கள் கலந்துகொண்டு காவல் துறைக்கு ஒத்துழைப்பதாக தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக கத்தி, வாள், வீச்சரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பை கண்காணிக்கவும், இதுபோன்ற ஆயுதங்களை தவறானவர்கள் கைகளுக்கு செல்வதைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு காவல் ஆணையாளர்களுக்கும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Air Pollution in Chennai: ’சென்னையின் காற்று மாசைக் கட்டுப்படுத்த ஒரே வழி இதுதான்’ - பூவுலகின் நண்பர்கள்!
*அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் தயாரிப்பவர்கள், தயாரிக்கும் இடங்களை கண்டறிய வேண்டும்.
*அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை வாங்க வருவோரின் பெயர், முகவரி, கைப்பேசி எண், எந்த காரணத்திற்காக வாங்குகிறார் போன்றவற்றை பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.
* விவசாயம் / வீட்டு உபயோகம் அல்லாமல் மற்ற காரணங்களுக்காக கத்தி போன்ற ஆயதங்களை அடையாளம் தெரியாதவர்களிடம் விற்பனை செய்யக்கூடாது,
*கண்காணிப்பு கேமராக்களை கடை மற்றும் பட்டறைகளில் பொருத்தப்பட வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்துவதில் சிரமம் ஏற்பட்டால் காவல் துறை உதவி செய்ய வேண்டும்.
* குற்றவாளிகள் பற்றிய தகவல்களை காவல் துறைக்கு தெரிவிப்பவர்களுக்கு தக்க வெகுமதி வழங்க வேண்டும்.
இதன்படி ஒவ்வொரு காவல் செயலாக்க வேண்டும். அறிவுறுத்தியுள்ளார். என நிலைய அதிகாரியும் மேற்கண்ட அறிவுரைகளை காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
H.Raja On CM Stalin : கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர்.. ட்விட்டர் ஸ்பேசஸில் பேசிய ஹெச்.ராஜா..