காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,6ம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.,9ம் தேதியும் தேர்தல் நடக்கிறது.  தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி துவங்கி 22 ஆம் வரை நடைபெற்றது. அதேபோல மீதமிருக்கும் 28 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதிவுகளுக்கு இடைத்தேர்தல் வருகின்ற 9ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ளது.



ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் தற்போது தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், தங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.



இதையொட்டி அக்டோபர்  6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் இயங்கும் அரசு மதுபான கடை மற்றும் மதுக்கூடங்கள் ஆகியவை மூடி இருக்க வேண்டும் , அதேபோல் தேர்தல் நடக்கும் இடங்களை சுற்றி உள்ள ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும், மதுபான கூட மற்றும் மதுபான கடைகளை மூடி இருக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல் அக்டோபர் ஒன்பதாம் தேதி மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அக்டோபர் 12 ஆம் அன்றும் , இதே போல் அனைத்து மதுபான கடைகளையும் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாக்குப்பதிவு நாளில் தேர்தல் நடைபெறும் பகுதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணப்படும் பகுதிகளிலு,ம் அப்பகுதிக்கு அருகில் ஐந்து கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளும் பீர் , ஒயின் மற்றும் இந்திய தயாரிப்பு மதுபானங்கள் விற்பனை செய்வதோ அல்லது மதப் போதனை அப்பகுதியில் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மீறுபவர்கள் மீது உரிய சட்டம் மற்றும் விதிகளின்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

9 மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிப்பு

 

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 9-ம் தேதியும் நடைபெறவுள்ளது. தேர்தல்  நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X