ஆதிகாலம் முதல் அதிநவீனம் எனப்படும் ஸ்மார்ட் உலகம் வரை திருட்டு என்பது மட்டும் அழியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. ஏதாவது ஒரு குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து விடவேண்டும் என்ற நோக்கத்துடன் பலரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பணப்புழக்கம் குறைந்து டிஜிட்டல் வழியிலேயே பணப்பரிமாற்றம் நடைபெறுவதால் திருடர்கள் தங்களை மேம்படுத்திக் கொண்டு டிஜிட்டல் வழியில் திருட்டு சம்பவங்களை அரகேற்றி வருகின்றனர். தொழில் நுட்ப காலத்திற்கு ஏற்ப தற்போது திருடர்களும் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி திருடி வருகின்றனர்.


பால்சல் மூலம் மோசடி


அதன்படி, சில நாட்களாக பார்சல் மூலம் மோசடி நடைபெற்று வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்துள்ளன. அதனால் டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது, "உங்களின் மொபைல் போனுக்கு குறிப்பிட்ட எண்ணில் இருந்து கால் வரும். அதில் நீங்கள் அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது. இதுகுறித்து தகவல் தெரிய வேண்டுமென்றால் எண் ஒன்றை அழுத்தவும்” எனக் கூறுவர்.


"எண் ஒன்றை அழுத்தியதும், நீங்கள் மும்பையில் இருந்து தைவானுக்கு அனுப்பிய பார்சல் திரும்பி வந்துள்ளது.  அதில் போதைப்பொருட்கள், சட்ட விரோதமான பார்சல்கள் உள்ளன. எனவே நாங்கள் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளோம் என்று கூறுவர். இதை கேட்டவுடன் நீங்கள் உடனே அதிர்ச்சி அடைவீர்கள். உங்களின் அழைப்பை உடனே காவல் நிலையத்திற்கு இணைக்கிறோம்” என்று தெரிவிப்பார்.


”மறுமுனையில் காவல்துறை அதிகாரிகள் போல் ஒருவர் பேசுவார். உடனே நீங்கள் அதை நம்பிவிடுவீர்கள். அந்த நபர், உங்களின் ஆதார் எண், வங்கி கணக்கை பயன்படுத்தி தான் போதை  பொருள் கடத்தல் நடந்துள்ளது. உங்கள் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. எனவே உங்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளோம்" எனக் கூறுவர்.


"தொடர்ந்து நீங்கள் பேசும்போது, மற்றொரு நபர் நாங்கள் உதவி செய்கிறோம். அரசு வழக்கிறஞர் உங்களுடன் பேசுவார் என்பார். அந்த நபர் உங்களிடம் 1 லட்சம் ரூபாய் கேட்பார். நீங்கள் அந்த பணத்தை கொடுத்த பின், மேலும் 5 லட்ச ரூபாய் கேட்பார். இப்படி உங்களை பணம் பறிப்பார்கள்" என டிஜிபி சைலேந்திரா பாபு தெரிவித்தார்.


70 புகார்கள்


இந்த நூதன மோசடி மூலம், சில நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 70 புகார்கள் வந்துள்ளன. எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இதுபோன்ற நம்பர் மூலம் அழைப்பு வந்தால் எடுக்க வேண்டாம். எச்சரிக்கையாக இருங்கள் என டிஜிபி சைலேந்திர பாபு வீடியோ வெளியிட்டு கூறியுள்ளார்.




மேலும் படிக்க


Sexual Abuse: 2 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: இளைஞனின் தாயை துப்பாக்கியால் சுட்ட சிறுமி: நடந்தது என்ன?