தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு முதல் பள்ளிகள் முறையாக இயங்கவில்லை. இந்த நிலையில், கொரோனா கட்டுக்குள் வந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு, தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஆனால், கொரோனா பரவல் இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் இயங்கவில்லை.


தற்போதுள்ள சூழலில், பள்ளிகளல் கல்லூரிகள் என தமிழ்நாட்டில் எந்த கல்வி நிறுவனங்களும் இயங்கவில்லை. வழக்கமாக பள்ளிகளில் கல்வி சேர்க்கை ஜூன் மாதங்களில் தொடங்கப்படும். ஆனால், நடப்பாண்டில் கொரோனா தடுபபு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 12ம் வகுப்பு மாணவர்கள் உள்பட அனைவருக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சிகள் வழங்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளதால் தமிழ்நாட்டில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் மட்டும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.




இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின்போது பல்வேறு பணிகள் நடைபெற உள்ளதால், ஆசிரியர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.


கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்களுடன், பிற ஆசிரியர்களும் பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா அதிகமாக உள்ள கோவை, திருப்பூர் ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்த பிறகு மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில தினங்களாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கோவை, திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆலோசனை நடத்தி வருகிறார். கரூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிகளைத் திறப்பதற்கு தயாராக உள்ளோம். முதல்வர் உத்தரவிட்டவுடன் பள்ளிகள் திறக்கப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


பள்ளிகளை திறப்பதற்கு முன்பாக, ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனரா, போதிய அளவு சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுமா, வகுப்பறைகளில் போதிய இடைவெளியுடன் மாணவர்களை அமரவைப்பது. முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆய்வுப்பணிகள் நடைபெற்று வருகிறது.


 


மேலும் படிக்க : கைதி ரீமேக்" Heroine'க்காக Director செய்த மாற்றம்