காங்கேயத்தில் நடைபெற்ற திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்: “ நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். மார்ச் 22-ஆம் தேதியில் இருந்து தேர்தல் பணிகளை தொடங்கி விட்டோம். தொண்டர்களை பார்க்கும் போது களைப்பு நீங்கி உற்சாக மனநிலையோடு இருக்கிறேன்.வரும் நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு வாக்குச்சாவடி முகவர்கள் தான் பொறுப்பாளர்கள் என்பதை மறந்து விடக்கூடாது.
வெற்றியை மட்டுமே இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது வாக்குச்சாவடி முகவர்களின் முதல் கடமை. திமுக அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் தொடர்ந்து எடுத்துரைக்க எடுத்துரைக்க வேண்டும். வாக்காளர்களுக்கு என்ன தேவையோ அதை தெரிந்து கொண்டு நிறைவேற்ற வேண்டும். பொதுமக்களுக்கு தேவையானவற்றை செய்து தர கட்சி நிர்வாகிகளை அணுகி நிறைவேற்றித் தர வேண்டும்.
மக்களின் நியாமான கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக சத்தியமாக நிறைவேற்றித் தரப்படும். மக்களாட்சி நடத்தி வரும் நம்மை நிராகரிப்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்றே நான் நம்புகிறேன். திமுக அளித்த மிகப்பெரிய வாக்குறுதியான கலைஞர் உரிமைத் திட்டத்தை நிறைவேற்றி உள்ளோம்.
பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை. வரவும் கூடாது. கடந்த 10 ஆண்டுகளில் பாஜக அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்போம் என்று மோடி கூறினாரே மீட்டாரா? மகளிர் உரிமைத் தொகையை வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லை எனக்கூறி கொள்ளையடிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது. ஆண்டுக்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்றார் மோடி, வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தந்தாரா? படிக்கும் பட்டதாரிகளாக இருக்கும் நம் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார் மோடி.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதரத்தை படுகுழியில் தள்ளிவிட்டது மோடி அரசு. மத்திய அரசின் தவறான பொருளாதர கொள்கையால், தொழில் நகரங்களான கோவை, திருபூர், நொடிந்து போய் உள்ளன. மத்திய அரசின் தவறான பொருளாதர கொள்கையால் டாலர் சிட்டியான திருப்பூர் தற்போது டல் சிட்டி ஆகி விட்டது. பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினருக்கு உதவ இதுவரை மத்திய அரசு முன்வரவில்லை. சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்றது மத்திய அரசு, அதை செய்தார்களா? என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.
மேலும் படிக்க