- Anbumani Statement: "மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் தமிழகம் பொருளாதார வீழ்ச்சியடையும்” - அன்புமணி எச்சரிக்கை!
மின் கட்டணத்தை குறைக்காவிட்டால் தமிழக பொருளாதாரம் வீழ்ச்சியடையும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கடந்த ஓராண்டில் அடுத்தடுத்து இரு முறை நடைமுறைப்படுத்தப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு அதன் விளைவுகளைக் காட்டத் தொடங்கியுள்ளது. தொழில் மற்றும் வணிகப் பிரிவினருக்கான மின்சாரக் கட்டணம் நேரடியாகவும், மறைமுகமாகவும் உயர்த்தப்பட்டிருப்பதால் பொருட்களின் உற்பத்திச் செலவு அதிகரித்திருப்பதுடன், முதலீடு வெளியேறுதல், வேலையிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மேலும் படிக்க
- Rain Alert : தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்!
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலட்சதீவு பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 24.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க
- Vande Bharat: சென்னை-நெல்லை உட்பட 9 வந்தே பாரத் ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!
நாட்டில் புதிதாக 9 வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். வீடியோ கான்பரன்சிங் மூலம் ரயில்களை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். உலகத்தரத்தில் அதிவேகமான ரயில்சேவை என்ற நோக்கில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வே, வந்தே பாரத் ரயில்களின் சேவையை வழங்கி வருகிறது. ஏற்கனவே நாடு முழுவதும் 25 வழித்தடங்களில் 50 வந்தேபாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் படிக்க
- Jayakumar On BJP: ”அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்பதில் மாற்றமில்லை” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “பாஜக உடன் கூட்டணி முறிவு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. செப்டம்பர் 18ம் தேதி எடுக்கப்பட்ட நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை” என தெரிவித்தார். அதிமுகவின் மூத்த தலைவர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் டெல்லி சென்று, பாஜக தலைவர்களை சந்தித்து இருந்தனர். இந்நிலையில் தான், பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொண்டதில் எந்த மாற்றமும் இல்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
- ADMK Meeting: நாளை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்...எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், தலைமை கழக நிர்வாகிகள் அனைவருக்கும் அழைப்பி விடுக்கப்பட்டுள்ளது. கூட்டணியில் பாஜக இல்லை என ஜெயக்குமார் அறிவித்த நிலையில், நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே, நாளை நடைபெறும் ஆலோசனையில் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும் படிக்க