மாநில பொதுத்துறை நிறுவனங்களின் செயல்பாடுகளை கண்காணிப்பதற்காக வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் இருந்து, நிதித்துறை சார்பிலான புதிய வலைதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 


புதிய வலைதளம் தொடக்கம்:


நிறுவனங்களின் விதிகளை பின்பற்றுதல் மற்றும் நிதி கண்காணிப்பு முறைமை என்கிற www.ccfms.tn.gov.in என்ற இணையதளத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி இன்று வைத்தார். வளர்ந்து வரும் துறைகளுக்கான தொடக்க நிதி வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 


அதை தொடர்ந்து, எஸ்.சி, எஸ்.டி-க்கான ஸ்டார்ட் அப் நிதி திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு அனுமதி ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். 






அப்போது, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Also Read: PTR Palanivel Thiagarajan : ஆளுநர் தேநீர் விருந்து அனைவருக்குமானது...இதுதான் இலக்கு.. பி.டி.ஆர் மறைமுக பதிலடி..?!.....