வட அமெரிக்க தமிழ்ச்சங்க பேரவை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக பங்கேற்றார். அப்போது, அவர் பேசியதாவது,
“ உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழும் இனம் தமிழினம். எல்லாருக்கும், எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற இலக்குடன் திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. உலகின் மூத்தமொழியான தமிழுக்கு சொந்தக்காரர்கள் நாம்.
இலங்கையில் இருந்து தமிழ்நாடு வந்த தமிழர்கள் நலன் காக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. உலகில் தமிழர்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய்வீடு. பழம்பெருமை பேசுவது ஒன்றும் தவறல்ல. நமக்கு பழம்பெருமை இருக்கிறது என்பதால் பேசுகிறோம். ஸ்ரீ என்பதற்கு பதிலாக திரு என்பதையும், ஸ்ரீமதி என்பதற்கு பதிலாக திருமதி எனக் கொண்டுவந்தது நாம்தான்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபின் ஆலயங்களில் அன்னைத் தமிழ் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. திராவிடம் என்ற சொல்லை திட்டமிட்டேதான் குறிப்பிட்டு வருகிறேன். எல்லாருக்கும் எல்லாம் என்ற கோட்பாட்டிற்கு எதிரானவர்கள் திராவிடத்தை எதிர்க்கிறார்கள். இத்தகைய எதிரிகள் ஆயிரம் ஆண்டுகளாக வாழ்கிறார்கள். அவர்களை இணங்கண்டு கொள்வோம்.
மேலும் படிக்க : "பணம் செலவு செய்தால் ஸ்டாலினையே அதிமுக பொதுச் செயலாளர் என்பார்கள்" - டிடிவி.தினகரன் சரவெடி
சங்ககால துறைமுகங்களான பூம்பூகார், கொற்கை, அழகன்குளம், பசுவசமுத்திரம் ஆகியவை அன்றைய தமிழ்நிலத்தில் முக்கிய பங்காற்றின. சிலர் அவர்களது வரலாற்றை கற்பனை கதைகள் மூலம் வடிவமைக்கிறார்கள். நாம் அப்படியல்ல. நாம் வரலாற்றுத்தரவுகளின் அடிப்படையில் உறுதி செய்துதான் அறிவிக்கிறோம்.
இந்திய துணைக்கண்டத்தின் வரலாறு இனி தமிழ்நிலத்தில் இருந்துதான் தொடங்கி எழுத வேண்டும் என்பதற்காக சான்றுகளும், முன்கள ஆய்வுகளும் உறுதி செய்யும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசினேன். இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்து உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன”
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் படிக்க : Watch Video: சிறைதான் கிடைத்தது.. பதவி எனக்கு தங்கதாம்பாளத்தில் கிடைக்கவில்லை - அனல் பறக்க பேசிய ஸ்டாலின்!
மேலும் படிக்க : சமூகநீதி என்றால் என்னவென்றே தெரியாதவர் திமுகவிற்கு பாடம் எடுக்க வேண்டாம்! - டி.ஆர்.பாலு கண்டனம்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்