முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற உள்ள தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 வழங்குவது, பட்ஜெட் ஒப்புதல் குறித்து ஆலோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 3ஆவது வாரத்தில் தமிழ்நாட்டில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளதாகவும், தமிழ்நாடு அரசின் பட்ஜெட் வரும் 18ஆம் தேதியும், வேளாண்மை பட்ஜெட் 19ஆம் தேதியும் தாக்கல் ஆக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு அமைச்சரவை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், வரைவு நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படலாம் எனவும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும், இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதாவின் நிலை குறித்தும், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பது பற்றியும் பேசப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்