தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


மிதமான மழை:


தமிழ்நாட்டில் ஏழு இடங்களில் மிதமான மழையும், 31 இடங்களில் கனமழையும் பெய்ததுள்ளது. அதிகபட்சமாக நாகை வேதாரண்யத்தில் 17 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. அக்டோபர் 1 முதல் தற்போது வரை 23 செ.மீ மழை பெய்துள்ளது. இது கடந்த காலத்தை காட்டிலும் நான்கு சதவீதம் குறைவு.


மன்னார் வளைகுடா,  குமரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரையிலும் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, மீனவர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழையும் ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.


முதல்வர் ஆய்வு:


இந்நிலையில், சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 14) நேரில் சென்று ஆய்வு செய்தார்.  மேலும் அதிக மழை பாதிப்புள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களுடன் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.


அதன்படி, கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ், மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி ஆகியோருடன் மழை பாதிப்புகளை கேட்டறிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க: TN School Leave: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! வேறு எங்கெல்லாம்? லிஸ்ட்டை பார்த்து தெரிஞ்சிகோங்க!


 


மேலும் படிக்க: TN Rain: மரக்காணம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் மழை நீரால் தத்தளிக்கும் சிறுவாடி பகுதி