சென்னையில் இருந்து பெங்களூர் சென்ற சரக்கு ரயிலில் தனி ஒருவனாக பயணம் செய்த நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரைக் கண்டதும் அந்த நபர் தப்பிச்சென்றார்.


சரக்கு ரயில்


சென்னையில் இருந்து பெங்களூருக்கு சரக்கு ரயில் ஒன்று புறப்பட்டுச் சென்றது. நேற்று காலை 6 மணியளவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த விண்மங்கலம் பகுதியில் சென்றுகொண்டிருந்தது.  அப்போது சிக்னல்காக அந்த ரயில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது ரயிலைக் கண்ட விண்மங்கலம் ரயில்வே அதிகாரிகள்  ஷாக் ஆகினர். சரக்கு ரயில் மேல் தனி ஒருவனாக ஒருவர் பயணித்து வந்துள்ளார். உயர் மின் அழுத்த வயர்கள் அதிகம் இருக்கும் ரயில்வே ட்ராக் என்பதால் உடனடியாக துரித நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் மின் இணைப்பை எல்லாம் உடனடியாக நிறுத்தினர். 


Crime : தங்கையை திருமணம் செய்த வாலிபர்! ஓட, ஓட விரட்டிக் கொலை செய்த அண்ணன்! அரங்கேறிய சாதியக்கொலை?


30 நிமிடங்கள்..


அதன்பின்னர் ரயில் அருகே சென்ற அதிகாரிகள் அந்த தனி ஒருவனை கீழே இறக்கும்படி கூறியுள்ளனர்.அதிகாரிகளின் பேச்சுக்கு காதுகொடுக்காத அந்த நபர் ரயிலை விட்டு கீழே இறங்காமல் அடம் பிடித்துள்ளார். அதுமட்டுமின்றி முன்னுக்குபின் முரணாக ஏதேதோ பேசியுள்ளார். இதனையடுத்து இந்த விவரம் வாணியம்பாடி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் தனி ஒருவனைக் காணகூட்டமும் கூடியது. ரயில்வே அதிகாரிகள், தீயணைப்புத்துறையினர் வருவதை அறிந்த அந்த நபர் எகிறி  குதித்து தப்பி ஓடினார். ஒருபுறம் அவரை போலீசார் தேட மறுபுறம் மின் இணைப்பு கொடுக்கப்பட்டு 30 நிமிடங்கள் கழித்து சரக்கு ரயிலும் புறப்பட்டுச் சென்றது. 




மனநலம் பாதிக்கப்பட்டவரா?


தனி ஒருவனின் சரக்கு ரயில் பயணத்தால் வாணியம்பாடி வழியாக செல்ல வேண்டிய ஆலப்புழா உள்ளிட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. திடீரென ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறை தப்பிச்சென்ற நபரை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்றும், நின்றுகொண்டிருந்தபோது ரயிலில் ஏறி பின்னர் இறங்க வழி தெரியாமல் அதில் பயணம் செய்திருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண