புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி - கலால் துறை அறிவிப்பு

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது.

Continues below advertisement

புதுச்சேரியில் புதிய மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி வழங்கப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது. புதுவையில் ஏற்கனவே 5 மதுபான தொழிற்சாலைகள், ஒரு பீர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த நிலையில் புதுவை மாநில வருவாயை பெருக்க அரசு முடிவு செய்து மேலும் மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதியளிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கலால்துறை நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம் என கலால்துறை இணை ஆணையர் சுதாகர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

Ponmudi Latest Speech : பிரதமரிடம் முதலமைச்சர் கேட்டதில் என்ன தவறு?..கொதித்தெழுந்த அமைச்சர் பொன்முடி

அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

 புதுவை கலால்விதிகள் சட்டம் 1970-ன் படி விண்ணப்பிக்க வேண்டும். மதுபான தொழிற்சாலை முதலீடு, சராசரி உற்பத்தி, தொழிலாளர்கள் எண்ணிக்கையை குறிப்பிட வேண்டும். ஆலை வளாக அமைப்பு, தண்ணீர் தேவைகள், சுத்திகரிப்பு முறை ஆகியவற்றை முழுமையாக குறிப்பிட வேண்டும். எந்த இ டத்தில் ஆலை அமைக்கப்பட உள்ளது. குறைந்தபட்சம் 4 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட வேண்டும்.

எந்தவித குற்ற பின்னணியும் இல்லை, மாநில அரசுகளின் கருப்பு பட்டியலில் இடம் பெறவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டு வருமான வரி தாக்கலை சமர்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் ஆண்டு வருவாய் ரூ.100 கோடியாகவும், அதில் விண்ணப்பதாரரின் மதிப்பு குறைந்தபட்சம் ரூ.50 கோடியாகவும் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர், இந்தியாவில் மதுபான உற்பத்தி தொழிலில் குறைந்தபட்சம் 5 ஆண்டு அனுபவம் மிக்கவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் கண்டிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 3 லட்சம் பெட்டிகள் மதுபானம் தயாரித்தவராக இருத்தல் வேண்டும்.

Annamalai As Actor : நடிகராக அவதாரம் எடுத்த அண்ணாமலை ! சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இதுதவிர கலால் ஆணையர் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். கலால்துறைக்கு விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமையுண்டு. இந்த நிபந்தனைகளை ஏற்று மதுபான ஆலை நடத்த முன்வருவோருக்கு முதல்கட்ட அனுமதி வழங்கப்படும். ஓராண்டுக்குள் பிற துறைகளின் அனுமதி பெற்று ஆலையை தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் கலால்துறையின் அனுமதி ரத்தாகும் வாய்ப்புள்ளது என அதில் குறிப்பிட்டு ள்ளார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement