நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி ஐபிஎல் சூதாட்டம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் விசாரணை நடத்தி வந்தார். இவர் வெளியிட்ட விசாரணை அறிக்கையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குறிப்பிட்டிருந்தார்
இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தனியார் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத நிகழ்ச்சியில் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கப்பட்டதாக கூறி, 100 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி 2014ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
ஜீ தொலைக்காட்சி, அதன் ஆசிரியர், போலீஸ் அதிகாரி சம்பத்குமார் மற்றும் தனியார் தொலைதொலைக்காட்சி ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் தனியார் தொலைக்காட்சி தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “தோனி தரப்பு இந்த மனுவில் பல தகவல்களை மறைந்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் மேட்ச் பிக்ஸிங் செய்தது. சூதாட்டத்தில் தோனிக்கு தொடர்பிருப்பதாக இடைத்தரகர் கிட்டி சாட்சியம் அளித்தது. தோனியை காப்பாற்றும் நோக்கில் கிட்டியின் வாக்குமூலத்தை சிபிசிஐடி மறைத்தற்கு முத்கல் கமிட்டி கண்டனம் தெரிவித்தது உள்ளிட்ட பல விஷயங்களை மறைத்து தோனி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். மேலும், தோனி மீது எங்களுக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. கிரிக்கெட்டின் நடைபெறும் சூதாட்டத்தை வெளிச்சத்திற்கு கொண்டுவரவே விவாத நிகழ்ச்சியை நடத்தினோம். தோனி என்பவர் கிரிக்கெட்டை விட உயர்ந்தவர் இல்லை. அது சூதாட்டத்தின் அடித்தளமாக மாறிவருகிறது.
அதுபோலதான் சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் கருத்து தெரிவித்துள்ளது. ஊடகங்களின் குரல்வளையை நெரிக்கவே தோனி வழக்கு தொடர்ந்துள்ளாதால் அபராதத்துடன் அவரின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரணைக்கு வந்தபோது “கருத்து சுதந்திரம் என்பது அடுத்தவரின் தனிமனித உரிமையை பாதிக்கக்கூடாது” என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இதனிடையே தோனி இழப்பீடு கேட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மானநஷ்ட இழப்பீடாக ரூ. 100 கோடி கேட்ட தோனி வழக்கை நிராகரிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சம்பத் குமாருக்கு எதிராக தோனி தொடர்ந்த வழக்கை டிசம்பர் 15ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Cremation of CDS Bipin Rawat Live: முப்படை தளபதிக்கு உலக நாடுகள் இரங்கல்: இன்று டெல்லி செல்கிறது வீரமரணம் அடைந்தோர் உடல்!