செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நகர காவல் நிலையம் உள்ளது.  வழக்கு ஒன்றில் கையெழுத்து போட்டுவிட்டு,  செங்கல்பட்டு  கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக்  டீ குடிக்க வந்துள்ளார். 


அப்போது  ஒரே இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் கொண்ட கும்பல் கார்த்திக் மீது நாட்டு  வெடிகுண்டு வீசியும் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியும் உரு தெரியாமல் தலையை சிதைத்துவிட்டு தப்பியோடிவிட்டது . சம்பவ இடத்திலேயே அப்பு கார்த்திக் துடிதுடித்து  உயிரிழந்தார்.


இதனையடுத்து அந்தக் கும்பல் செங்கல்பட்டு(chengalpattu) மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷையும் ( 22)  சரமாரியாக வெட்டி சாய்த்து கொன்றுவிட்டு தப்பியோடியது.


இருவரது உடலையும் மீட்ட செங்கல்பட்டு நகர போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து  தப்பியோடிய கும்பல் யார்? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.


Also Read | Chengalpattu Encounter: ''பிடிக்க போனோம்.. நாட்டு வெடிகுண்டு வீசினாங்க'' - செங்கல்பட்டு என்கவுண்டரில் நடந்தது என்ன?


இந்நிலையில் இந்த இரட்டை கொலை தொடர்பாக ரவுடிகள் மொய்தீன் மற்றும் தினேஷ் ஆகியோர் காவல் துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டனர். இதில் இரண்டு பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் செங்கல்பட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


முன்னதாக, இரட்டை கொலையை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம கும்பல் குறித்து தகவல் கிடைத்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்தக் கும்பல் பயன்படுத்திய நாட்டு வெடிகுண்டுகளை வல்லுநர்கள் உதவியுடன் அப்புறப்படுத்தி,   விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது. அதுமட்டுமின்றி தப்பியோடிய மூன்று நபர்களையும்  கைது செய்ய தனிப்படையும் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: அரை மணி நேர கேப்.. ஒரே கும்பல்.. அடுத்தடுத்து இரண்டு கொலை.! செங்கல்பட்டை அதிர வைத்த சம்பவம்!


Bulli Bai App Case: "புல்லி பாய்" வழக்கில் 12-ஆம் வகுப்பு மாணவி கைது: நேபாளத்தில் உள்ள மாஸ்டர் மைண்ட் Q யார்?