மழை நேரத்துல சூடான சுவையான ஸ்நாக்ஸ் சாப்பிடனும் போல இருக்கா? வழக்கமான போண்டா, வடை சாப்பிட்டு போரடிச்சி போச்சா? கவலையே வேண்டாம். இந்த சீஸ் பூண்டு டோஸ்ட்டை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. அப்றம் மழை நேரத்துல மட்டும் இல்ல மாலை நேரத்திலும் இந்த ரெசிபியை சாப்பிடதான் விரும்புவிங்க. இந்த ரெசிபியை குறைந்த நேரத்தில் மிக எளிமையாக செய்து விட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த ரெசிபியை விரும்பி சாப்பிடுவர். வாங்க சீஸ் பூண்டு டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.


தேவையான பொருட்கள்



  • 4 ரொட்டி துண்டுகள்

  • 2-3 சீஸ் க்யூப்ஸ்

  • 2 பூண்டு பற்கள் பொடியாக நறுக்கியது

  • ¼ தேக்கரண்டி கற்பூரவள்ளி அல்லது கலப்பு மூலிகைகள்

  • ¼ தேக்கரண்டி மிளகாய் தூள்

  • ¼ தேக்கரண்டி கருப்பு மிளகு தூள்


செய்முறை


1. ஒரு சிறிய கிண்ணத்தில், 1 டீஸ்பூன் வெண்ணெய், நறுக்கிய பூண்டு மற்றும் சுவையூட்டிகளை சேர்த்து  நன்றாக கலக்க வேண்டும்.

 

2.ரொட்டித் துண்டுகளின் ஒரு பக்கத்தை சூடான தவா அல்லது பாத்திரத்தில் லேசாக வறுக்க வேண்டும்.

 

3.வறுக்கப்பட்ட பக்கத்தில் பூண்டு வெண்ணெயை  பரப்பவும். துண்டுகளைச் சுற்றி மீதமுள்ள வெண்ணெயை சேர்க்க வேண்டும். மறுபுறமும் புரட்டிப் போட்டு வேக வைக்க வேண்டும். ( அடுப்பை குறைந்த தீயில் வைத்து இதை செய்ய வேண்டும்)

 

4. இப்போது ரொட்டித் துண்டின் மேல் பக்கத்தில் தாராளமாக சீஸ் தடவ வேண்டும். பின் கருப்பு மிளகு பொடியை தூவ வேண்டும்.

 

5.இப்போது தவாவை ஒரு மூடி போட்டு மூடி விட வேண்டும். அந்த மூடி பிரெட் துண்டின் மீது படாதவாறு இறுக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

 

6.ரொட்டித் துண்டுகளை 5-10 நிமிடங்கள் அல்லது சீஸ் உருகும் வரை குறைந்த தீயில் வேக வைக்க வேண்டும். பிரெட் துண்டின் அடிப்பகுதி தீயாமால் பார்த்துக் கொள்ள வேண்டும். பிரெட் துண்டின் அடிப்பகுதி தீயவில்லை என்பதை ஒரு கரண்டியை கொண்டு திருப்பி பார்த்து உறுதி செய்து கொள்ளலாம்.  சீஸ் உருகியதும் சீஸ் பூண்டு டோஸ்ட்டை சுவைக்கலாம். 

 

மேலும் படிக்க