சந்திராயன் 3 இன்னும் சில நேரங்களில் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில், அதற்கு மூளையாக செயல்பட்டவர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதும், அதற்காக அம்மாவட்ட மக்கள் தற்போது தங்களை பெருமையுடனும் கருதுகின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு இஸ்ரோவில் விஞ்ஞானியாக சேர்ந்தார் வீரமுத்துவேல். குறிப்பாக இவர் இஸ்ரோ தலைமையகத்தில் விண்வெளி உள்கட்டமைப்பு அலுவலகத்தின் துணை இயக்குநராகவும் இருந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு சந்திரயான் 3 திட்டத்தின் இயக்குநராக வீரமுத்துவேல் நியமிக்கப்பட்டார்.
இவர் தற்போது, குடும்பத்துடன் பெங்களூருவில் வசிக்கிறார். இவரது தந்தை பழனிவேல், ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர். தற்போது, SRMU., தொழிற்சங்க, மத்திய செயல் தலைவராக உள்ளார். இவரது தாயார் ரமணி.
வீர முத்துவேல் விவரம்:-
வீர முத்துவேல், விழுப்புரம் ரயில்வே பள்ளியில், 10ம் வகுப்பு வரை படித்தார். பிறகு விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில், மெக்கானிக்கல் டிப்ளமா முடித்தார். பின், சென்னை சாய்ராம் கல்லுாரியில், பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்தார். அதன் பின், திருச்சியில் உள்ள, ஆர்.இ.சி., அரசு பொறியியல் கல்லுாரியில், எம்.இ., மெக்கானிக்கல் பயின்றார். தொடர்ந்து 2004ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்தார். இதனிடையே சென்னை, ஐ.ஐ.டி.,யிலும் பயிற்சி பெற்றார். அவரது தற்போது சந்திராயன்-3 திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
சந்திராயன் 3 :-
சந்திரயான் 2 திட்டம் ஆனது தோல்வியில் முடிந்த நிலையில் சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. குறிப்பாக இந்த விண்கலம் எல்விஎம் 3 எம் 4 ராக்கெட் மூலம் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள 2ஆம் ஏவுதளத்தில் இருந்து இன்று மதியம் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பெருமை சந்திராயன் 3:
சந்திரயான் 3 மூலம் நிலவின் மேற்பரப்பில் விண்கலத்தைத் தரையிறங்கும் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெறும் என்று மத்திய விண்வெளித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்