அடுத்த 3 மணி நேரம்

தமிழகத்தில் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு அடுத்த 3 மணி நேரத்தில் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

இன்று வெளியான வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது:

”இன்று(மே 2) முதல் வரும் 6ஆம் தேதி வரை: அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள்  மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய  மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை  2°  செல்சியஸ் வரை படிப்படியாக  குறையக்கூடும். 

Continues below advertisement

அடுத்த 5 தினங்களுக்கு,( மே 6 வரை) தமிழக உள்  மாவட்டங்களில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2°-4°  செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்திற்கான வானிலை தொகுப்பு:

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு  இடங்களில் மழை பெய்துள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):

நிலக்கோட்டை (திண்டுக்கல்) 5.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை : 

அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் பொதுவாக இயல்பை விட 2° – 4° செல்சியஸ் மிக அதிகமாக இருந்தது. வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பை விட மிக மிக அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டி இருந்தது”. இவ்வாறு வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க 

India T20 World Cup Squad: 4 ஐபிஎல் அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட இந்திய அணியில் இல்லை.. மும்பையில் இருந்து மட்டும் 4 வீரர்கள்..!

NEET UG Exam Hall Ticket: நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை வெளியிட்ட என்டிஏ: பதிவிறக்கம் செய்வது எப்படி?