சமீபத்தில் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் 15 பேர் கொண்ட வீரர்களின் பெயர்களை பிசிசிஐ அறிவித்தது. இந்த 15 பேர் கொண்ட இந்திய அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்க, ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் அணிகளின் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து அதிகபட்சமாக 4 வீரர்கள் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். அதில், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளனர். ஒரு அணியில் இருந்து 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், டி20 உலகக் கோப்பைக்கு இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்படாத 4 ஐபிஎல் அணிகளும் உள்ளன என்பது உங்களுக்கு தெரியுமா..? 


கிடைக்காமல் போன வாய்ப்பு: 


சன்ரைசர்ஸ் ஹைதராபாத், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளில் இருந்து ஒரு வீரர் கூட டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. இருப்பினும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தைச் சேர்ந்த அபிஷேக் சர்மா மற்றும் டி நடராஜன் ஆகியோர் டி20 உலகக் கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான பட்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது.  அதேசமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில், நீண்ட ஆலோசனைகளுக்கு பிறகு, 15 பேர் கொண்ட அணியில் இருந்து நீக்கப்பட்டு ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். அதே நேரத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ரிங்கு சிங்க்-வும் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. 


மற்ற ஐபிஎல் அணிகளில் இருந்து எத்தனை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்..?


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இது தவிர, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளில் இருந்து தலா 3 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதேசமயம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் இருந்து தலா 2 வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். டி20 உலக கோப்பை அணியில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இருந்து அர்ஷ்தீப் சிங் மட்டுமே இடம் பிடித்துள்ளார்.


டி20 உலகக் கோப்பைக்கான இந்திய வீரர்கள் 15 வீரர்களும் - அவர்களது ஐபிஎல் அணிகளும்:



  1. ரோஹித் சர்மா - மும்பை இந்தியன்ஸ்

  2. ஹர்திக் பாண்டியா - மும்பை இந்தியன்ஸ்

  3. யஷஸ்வி ஜெய்ஸ்வால் - ராஜஸ்தான் ராயல்ஸ்

  4. விராட் கோலி - ராஜஸ்தான் ராயல்ஸ்

  5. சூர்யகுமார் யாதவ் - மும்பை இந்தியன்ஸ்

  6. ரிஷப் பண்ட் - டெல்லி கேப்பிடல்ஸ்

  7. சஞ்சு சாம்சன் - ராஜஸ்தான் ராயல்ஸ்

  8. ஷிவம் துபே - சென்னை சூப்பர் கிங்ஸ்

  9. ரவீந்திர ஜடேஜா - சென்னை சூப்பர் கிங்ஸ்

  10. அக்சர் படேல் - டெல்லி கேப்பிடல்ஸ்

  11. குல்தீப் யாதவ் - டெல்லி கேப்பிடல்ஸ்

  12. யுஸ்வேந்திர சாஹல் - ராஜஸ்தான் ராயல்ஸ்

  13. அர்ஷ்தீப் சிங் - பஞ்சாப் கிங்ஸ்

  14. ஜஸ்பிரித் பும்ரா - மும்பை இந்தியன்ஸ்

  15. முகமது சிராஜ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு


2024 டி20 உலகக் கோப்பை வருகின்ற ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. அதே நேரத்தில், இந்திய அணி தனது உலகக் கோப்பை போட்டியை அயர்லாந்து அணிக்கு எதிராக ஜூன் 5ஆம் தேதி விளையாட இருக்கிறது.