Breaking Live : தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. மழை நிலவரங்களின் தகவல்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 27 Nov 2021 12:49 PM
கோவை: யானைகள் உயிரிழப்பு - ரயில் ஓட்டுநர்கள் மீது வழக்கு

கோவையில் ரயில் மோதி 3 யானைகள் உயிரிழந்த சம்பவத்தில் ரயில் ஓட்டுநர் சுபயர், உதவி ஓட்டுநர் அகில் மீது வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு 

வருத்தம் தெரிவித்த அமைச்சர் கே.என்.நேரு


சு.வெங்கடேசன் குறித்த அமைச்சர் கே.என்.நேரு பேச்சுக்கு சிபிஎம் கண்டனம்


தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு


ஆளுநர் வி.என்.ரவியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை மற்றும் வெள்ள பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் வி.என்.ரவியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். 

சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகள் தீவிரம்....!

கிண்டி, ஆழ்வார்பேட்டை, கே.கே.நகர், அசோக் நகர், தி.நகர் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணிகளில் தீயணைப்பு படையினரும், மாநகராட்சி பணியாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 

ஒரே நாளில் ஆவடியில் 20 செ.மீ. மழை

சென்னையில் அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனால், அந்த பகுதியில் பெரும்பாலான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் வீட்டிற்குள் புகுந்த மழைநீர்...!

நள்ளிரவு முதல் கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு முக்கிய சாலைகளும் நீரில் மூழ்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், அந்த மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

முழங்கால் அளவு தண்ணீரில் மூழ்கிய சென்னை சாலைகள்...!

சென்னையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக கே.கே.நகர், தி.நகர், அசோக் நகர், வளசரவாக்கம், விருகம்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளின் பிரதான சாலைகள் பலவற்றிலும் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 

செம்பரம்பாக்கம் ஏரியில் திறக்கப்படும் உபரிநீரை அதிகரிக்க முடிவு

சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து விநாடிக்கு 3 ஆயிரம் கனஅடிநீர் உபரிநீர் திறக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சென்னையில் இயல்பைவிட 67 சதவீதம் பொழிந்துள்ள வடகிழக்குப் பருவமழை

சென்னையில் மட்டும் இதுவரை வடகிழக்குப் பருவமழை இதுவரை 96 சதவீதம் பொழிந்துள்ளது. இது இயல்பைவிட 67 சதவீதம் அதிகம் ஆகும்,

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை

தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் குமரி, தென்மேற்கு வங்க்கடல் மற்றும் தென்தமிழக கடற்கரை பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் 10 ஆயிரம் வீடுகளை சூழ்ந்த மழைநீர்

ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அந்த மாவட்டத்தில் மட்டும் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு குடியமர்த்தப்பட்டுள்ளனர். 

புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாடு மட்டுமின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

கடலோர மாவட்டங்களுக்கு அருகே உள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

கடலோர மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அதைஒட்டியுள்ள மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டில் கனமழை காரணமாக இன்று 23 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

Background

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டுக் நேற்று முன்தினம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கிய மழை பிற்பகலில் கனமழையாகவும், அதன் பின்னர் அதிகன மழையாகவும் கொட்டி தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. 10,000 வீடுகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மழை பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி,தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 29ஆம் தேதிவரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.