பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 11 வாரங்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், 12ஆவது வாரத்தில் ஃப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு, போட்டியாளர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் வந்து ஹவுஸ் மேட்ஸை உற்ச்சாக படுத்திவிட்டு சென்றனர். இந்த நிலையில் இந்த வாரம் 2 எவிக்‌ஷன் நடைபெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளது.


அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி வெளியேற்றம்:


 கடந்த வாரம் நடிகரும் - இயக்குனருமான ரஞ்சித் வெளியேறிய நிலையில்,  அவரை தொடர்ந்து இந்த வாரம் மஞ்சரி வெளியேற வாய்ப்புள்ளதாக சில தகவல்கள் வெளியாகின. ஆனால் யாரும் யாரும் எதிர்பாராத விதமாக தற்போது அன்ஷிதா மற்றும் ஜெஃப்ரி ஆகிய இருவர் தான் இந்த வாரம் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது. 




பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இன்னும் 3 வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. கடந்த வாரம் சிங்கிள் எவிக்ஷன் இருந்ததால் இந்த வாரமும் ஒரு போட்டியாளர் மட்டுமே வெளியேற வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் நினைத்த நிலையில், எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்று விஜய் சேதுபதி புரோமோவில் கூறியது போல் யாரும் எதிர்பாராத நேரத்தில் இந்த டபிள் எவிக்ஷன் நடந்துள்ளது.


பிக்பாஸ் வீட்டின் உள்ளே இதுவரை 12 போட்டியாளர்கள் இருந்த நிலையில், இருவர் வெளியேறிவிட்டதால்  தற்போது அவர்களின் எண்ணிக்கை 10 ஆக குறைந்துள்ளது. எஞ்சிய 10 போட்டியாளர்களில் ஒருவர் டிக்கெட் டூ பினாலே மூலமாக நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும் டாஸ்க் இந்த வாரம் நடத்தப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது. அதே போல், இந்த முறை பண பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் அந்த போட்டியாளர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.