தமிழகத்தில் மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதன் இயக்குநராக கார்த்திகா நியமிக்கப்பட்டு உள்ளார்.


முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜவுளித்துறை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல இந்து சமய அறநிலை துறை ஆணையராக ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். 


முன்னதாக தமிழ்நாடு முழுவதும் 15 துறைச் செயலர், 10 ஆட்சியர்கள் உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் இன்று (ஜூலை 16) இட மாற்றம் செய்யப்பட்டனர். இதில் உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அதேபோல சென்னை மாநகர ஆணையர் ராதாகிருஷ்ணனும் மாற்றப்பட்டார். ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளர் ஆக நியமிக்கப்பட்டார். 


ராணிப்பேட்டை, புதுக்கோட்டை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களின் ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியானது. 


இதையும் வாசிக்கலாம்: IAS Officers Transfer: உள்துறைச் செயலாளர் அமுதா அதிரடி மாற்றம்; 15 ஐஏஎஸ் அதிகாரிகள், 10 ஆட்சியர்கள் இடமாற்றம்- விவரம்


இந்த நிலையில் தொடர்ந்து மேலும் 25 ஐஏஎஸ் அதிகாரிகள் இன்றே (ஜூலை 16) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு, அதன் இயக்குநராக கார்த்திகா நியமிக்கப்பட்டு உள்ளார்.


முதல்வரின் முகவரி திட்டத்தின் சிறப்பு அதிகாரியாக இருந்த மோகன் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஜவுளித்துறை இயக்குநராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல இந்து சமய அறநிலை துறை ஆணையராக ஸ்ரீதர் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அறநிலை துறை ஆணையராக இருந்த முரளிதரன், சமூகப் பாதுகாப்புத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டு உள்ளார். 


கீழே உள்ள இணைப்பில் அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றங்கள் முழுமையாகக் கொடுக்கப்பட்டு உள்ளன. இதை க்ளிக் செய்து, விரிவாக அறியலாம். 


 



ஐஏஎஸ் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்களுக்கான இட மாற்ற உத்தரவுகளை தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பிறப்பித்துள்ளார்.