கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த உறையாமை (ஹீமோபீலியா) நோய்க்கு மருந்து இருப்பு இல்லை என பாதிக்கப்பட்ட நோயாளியுடன் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரூர் மாவட்டத்தில் ரத்த உறையாணமை (ஹீமோபீலியா) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது, கரூர் மாவட்டத்தில் ரத்த உறையாண்மை நோயால் பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவர்கள் உடலில் ஏதாவது சிறு காயம் ஏற்பட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று அதற்கான மருந்து ஊசி ( FACTOR 8 ) மூலம் செலுத்திக் கொள்ள வேண்டும் இல்லாவிடில் இரத்தம் உறையாத நிலை ஏற்படும்.


 


 




ஆனால், கடந்த 2  மாதங்களாக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரத்த உறையாமை நோய்க்கான மருந்து இருப்பு இல்லாத காரணத்தால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதே போன்று திருச்சி, மதுரை, சேலம், திண்டுக்கல் என அருகில் உள்ள மாவட்டங்களிலும் ரத்த உறையாமை நோய்க்கான மருந்து இல்லாததால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ரத்த உறையாமை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே உள்ள நிலையும் ஏற்பட்டுள்ளது. உடனடியாக மாவட்ட நிர்வாகம் ரத்த உறையாமை நோய்க்கான மருந்து தட்டுப்பாடு இல்லாமல், கிடைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


 


 




அதைத் தொடர்ந்து இந்நோயால் பாதிக்கப்பட்ட நபர் கூறுகையில், இந்த மெடிசன் விரிந்து கிடைக்க வேண்டுமென கோரிக்கை வைத்ததுடன் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நிலைமை குறித்து விவரித்தார். இந்த நோய் உள்ள நபர்கள் அவர்களுக்கு காயம் ஏற்படும்போது ரத்தம் நிற்காமல் செல்லும் எனவும் அல்லது காயம் ஏற்படும்போது காயப்பட்ட பகுதிகள் மிகுந்த வீக்கத்துடன் காணப்படும் எனவும் தெரிவித்தார். குறிப்பாக இந்த தடுப்பூசி மூலம் காயம் ஏற்பட்ட ரத்தப் போக்கையும், வீக்கத்தையும் உடனடியாக குறைக்கலாம் எனவும் காலம் தாழ்த்தாமல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்று ஊசி கிடைத்தால் இதிலிருந்து மீண்டு வரலாம் எனவும் காலம் தாண்டி இந்த நோயாளிகளுக்கு இந்த ஊசி கிடைக்கப்பெற்றால் எந்த பலனும் இல்லை என இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தையின் பெற்றோர் நம்மிடம் தெரிவித்தனர்.


 




இதே போல் கரூர் மாவட்டத்தில் இந்த நோயால் இதுவரை 52 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து இந்த  ஊசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த நோய் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் இதற்கு வீரியம் அதிகம் என கூறினார். அதேபோல் இந்த ஊசி கரூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனையில் கிடைப்பது இல்லை எனவும், அப்படியும் கிடைத்தாலும் விலை அதிகம் எனவும் தெரிவித்தனர். சுமாராக இந்த ஊசியின் விலை 5000 முதல் 25000 வரை இருக்கும் என பாதிக்கப்பட்டு தெரிவித்தனர்.


 




ஆகவே கரூர் மாவட்டத்தில் உள்ள 52 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என தெரிவித்துள்ளனர். விரைவாக எங்களது தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு வழங்கிய பிறகு தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்களிடம் இது குறித்து மனு வழங்கிய போது உடனடியாக அவர் இதற்கான நிரந்தர தீர்வை காண முயற்சிகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.