சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தமிழ்நாடு பாஜக நடத்திய உண்ணாவிரத போராட்டத்தில் அதன் சட்டமன்ற உறுப்பினர்  நயினார் நாகேந்திரின் தெரிவத்த கருத்து  மிகுந்த சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேசக்கூடிய அதிமுகவினர் ஒருவரை கூட பார்க்க முடியவில்லை என்ற அவரின் கருத்துக்கு பலரும் எதிர்விணை ஆற்றி வருகின்றனர்.

இதனையடுத்து,  அதிமுகவின் ஆதரவு இல்லாமல் மீண்டும் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் நயினார் நாகேந்திரனால்  வெற்றி பெற முடியுமா என்ற தொடர்ச்சியான கேள்வி அதிமுக சார்பில் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் அரசியல் தன்மை என்ன? என்பதை இங்கே காண்போம்.  

பிளவுபட்ட அரசியல்:    

கடந்த 50 ஆண்டுகால தமிழக அரசியலில் திமுக, அதிமுக என்ற இரண்டு பெரியத் திராவிட கட்சிகள் ஒட்டுமொத்த வாங்கு வங்கியில் 60- 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வருகின்றன. 

1990களில் இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் கொள்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியது. இது தமிழக அரசியலிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கியது. பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் தமிழக அரசியலில் கால் பதிக்கத் தொடங்கின. இந்த கட்சிகளின் வருகை தமிழக அரசியலை மேலும் ஆழமாக்கியது. அடையாள அரசியல் புதுப்பிக்கப்பட்டது. ஓட்டுகள் நாலாபுறமும் சிதற ஆரம்பித்தது. கூட்டணிக் கட்சிகளின் அவசியத்தை திமுக, அதிமுக கட்சிகள் உணரத் தொடங்கின. 1989 முதல் 2011 வரை நடைபெற்ற தேர்தலிகளில், கிட்டத்தட்ட 491 இடங்கள் 10% சதவிகித வாக்கு வித்தியாசங்கள் முடிவை தீர்மானித்ததாக  அரசியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, வெறும் 5% வாக்கு வித்தியாசங்கள் 254 இடங்களில் வெற்றியைத் தீர்மானித்திருக்கின்றன.

இந்த போக்கை, திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியின் கடந்தகால சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் உறுதி படுத்திவருகின்றன. அத்தொகுதியில், கடந்த 25 ஆண்டுகளாக  பிள்ளைமார், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு மட்டுமே திமுக, அதிமுக தங்கள் வேட்பாளராக முன்னுறுத்தி வருகின்றன. அதேநேரத்தில், மிகவும் சொற்பமான வாக்கு வித்தியாசமே அங்கு வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.          

திருநெல்வேலி: 

சட்டமன்றத் தேர்தல்  தேர்தல் முடிவுகள்  வாக்கு வித்தியாசம் 
2001

அதிமுக 

(நயினார் நாகேந்திரன்)

722 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி
2006

திமுக 

(நயினார் நாகேந்திரன் தோல்வி)

606 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
2011 
2011

அதிமுக 

(நயினார் நாகேந்திரன் வெற்றி)

 

3800 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி 
2016

திமுக 

நயினார் நாகேந்திரன் தோல்வி

601 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி 
2021

பாஜக  

(நயினார் நாகேந்திரன்) 

 23,107 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

 

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதி மிகுந்த போட்டித்தன்மை கொண்டது. கடந்த 25 ஆண்டுகளாக திமுக, அதிமுக மாறிமாறி வெற்றி பெற்று வருகின்றனர். எந்தவொரு  குறிப்பிட்ட சமூகமும் அங்கு பெரும்பான்மை கொண்டதாக இருக்கவில்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில், தேவேந்திரகுல வேளாளர்களின் கணிசமான வாக்குகள் பாஜகவுக்கு சென்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Nainar Nagendran: 'தப்பா போச்சு.. உள்நோக்கம் இல்லை.' சீறிப்பாயும் அதிமுகவினருக்கு விளக்கமளித்த நயினார்!