சேலம் மாவட்டம், சந்தைபேட்டை அருகே காடியாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் நல்லதம்பி (57). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்து உள்ளார். இந்நிலையில் சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து குளித்தலை அருகே உள்ள கவுண்டம்பட்டி கிராமத்திற்கு இன்று லாரியில் செங்கல்களை ஏற்றி வந்து உள்ளார். பின்னர் அங்கு உள்ள தொழிலாளர்கள் மூலம் லாரியில் இருந்த செங்கல்களை இறக்கிய நல்லதம்பி, மீண்டும் சேலத்திற்கு லாரியை எடுத்துக்கொண்டு புறப்பட்டு உள்ளார். 





குளித்தலை - மணப்பாறை மெயின் ரோட்டில் கழுகூர் அடுத்த கே.துறையூர் சாலையில் லாரி வந்து கொண்டு இருந்த போது ஓட்டுநர் நல்லதம்பிக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டு லாரியின் ஸ்டேரங் மீது விழுந்துள்ளார். லாரி சுமார் 100 மீட்டர் தூரம் வந்த பிறகு சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில்  இறங்கி அதே இடத்தில் நின்றது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- இந்தி திணிப்புக்கு எதிராக தமிழகத்தை ரத்ததில் தோய வைத்த மொழிப்போரும் அதன் தியாகிகளின் வரலாறும்...!



இச்சம்பவம் றித்து தகவல் அறிந்த தோகைமலை காவல் ஆய்வாளர் ராஜ்குமார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். அப்போது நெஞ்சுவலி ஏற்பட்டு லாரியின் ஸ்டேரங்கியில் நல்லதம்பி இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்து உள்ளது. இதனை அடுத்து நல்லதம்பியின் உடலை மீட்டு குளித்தலை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




குளித்தலை - மணப்பாறை மெயின் ரோட்டில் லாரியில் இறந்த நிலையில் சுமார் 100 மீட்டர் தூரம் வந்த போது ரோட்டில் வாகனங்கள் வராததால் அதிர்ஷ்ட வசமாக பெரும் விபத்துகள் தவிர்க்கப்பட்டது.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- சொத்து விவரங்களை மறைத்ததாக ஓபிஎஸ், ஓபிஆர் மீது தொடரப்பட்ட வழக்கு - ஆவணங்களை சரி பார்க்கும் பணிகள் தீவிரம்