கூட்டணி குறித்து முடிவெடுக்க எனக்கு அதிகாரமில்லை;தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி தலைமைதான் முடிவெடுக்கும் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 


அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை, அண்ணாமலை தனித்துப் போட்டியிட விரும்புவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அண்ணாமலை தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தேர்தலில் வாக்குக்காக பணம் கொடுப்பது குறித்து பேசியுள்ளார். அவரக்குறிச்சி தேர்தலுக்கு பிறகு என்னிடம் இருந்த பணம் இல்லை; நான் கடன்காரனாக இருக்கிறேன் எனத் தெரிவித்தார். 


அ.தி.மு.க. கட்சியில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல்கள், அதோடு பா.ஜ.க. உடனான கூட்டணி குறித்தும் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள், விமர்சனங்கள் என்றிருக்கும் நிலையில்,நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பானா ஆலோசனைக் கூட்டத்தில்  ``2024 தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணிவைத்தால் பா.ஜ.க மாநிலத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன்" என அண்ணாமலை பேசியதாகக் கூறப்பட்டது.


இதற்கு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ``இது குறித்து அண்ணாமலை பொதுவெளியில் பேசட்டும்" எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், கூட்டணி குறித்து பேசுவதற்கு தனக்கு அதிகாரமில்லை, நேரம் வரும்போது தங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.அண்ணாமலை பேசியதன் விவரம்:


தேர்தல் கூட்டணி குறித்து நேரம் வரும்போது உங்களுக்குத் தெரிய வரும். நேரம் வரும்போது விரிவாக பேசுவேன். தற்போது மக்கள் தூய அரசியலையே விரும்புகின்றன. தேர்தலில் பணம் கொடுக்காமல் இருப்பது முக்கியம். இன்றைய சூழலில் பணம் இல்லாமல் தேர்தலைச் சந்திக்க முடியாது என்ற நிலை வந்துவிட்டது. ஆளுங்கட்சியாக இருந்தால் இவ்வளவு, எதிர்க்கட்சியாக இருந்தால் கொஞ்சம் குறைத்துக் கொடுத்தால் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற அளவுக்கு அரசியல் மாறியிருக்கிறது. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அதனால் சில கருத்துகளை எங்களுடைய தலைவர்களிடத்தில் நான் பகிர்ந்திருக்கிறேன்.


இரண்டு ஆண்டுகளாக பா.ஜ.க-வின் மாநிலத் தலைவராகப் பதவி வகித்த பிறகு, தமிழக அரசியலில் இரண்டு ஆண்டுகளாக உற்று நோக்கிய பிறகு, நான் உறுதியாக நம்புகிறேன், மிகப்பெரிய மாற்றத்துக்கு தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். கூட்டணி குறித்து எனக்கு உரிமையோ,அதிகாரமோ இல்லை. கூட்டணியைப் பற்றி அதற்கான நேரம் வரும்போது எங்களுடைய தலைவர்கள் சொல்வார்கள்.


கடன்காரனாக இருக்கிறேன்!


நான் காவல் துறையில் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகளாக சம்பாதித்த எல்லா பணமும் அரவக்குறிச்சி தேர்தலில் போய்விட்டது. அட்ஜை நான் மிகவும் யோசித்து செலவு செய்திருக்கிறேன். சிறுக சிறுக சேர்த்து அதை செலவு செய்தேன். தேர்தல் முடிந்த பிறகு நான் கடனாளியாக இருக்கிறேன்.


 




மேலும் வாசிக்க..


ஃபைப்ராய்ட் கட்டிகளைக் குறைக்க உதவும் இயற்கை வைத்தியம்! : என்னவெல்லாம் செய்யலாம்?


பாபநாசம் நடிகை ஆஷாசரத் மகளுக்கு திருமணம்.... கோலாகலமாக நடைபெற்ற விழா... திரையுலகினர் வாழ்த்து