'பீஸ்ட்' படத்தை தடை செய்ய வேண்டும் - அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தல்

உண்மை நிலை இப்படி இருக்கும் போது, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Continues below advertisement

நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.

Continues below advertisement

இதுதொடர்பாக நிறுவன தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகருக்கு எழுதியுள்ள கடிதத்தில்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பீஸ்ட் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். வருகின்ற ஏப்ரல் 13-ம் தேதி, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ‘பிஸ்ட்’ திரைப்படம் வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளா சித்தரித்து இருப்பதாக கூறி குவைத்தில் தடை செய்யப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்து வருவதை வழக்கமாக கொண்டு, இஸ்லாமியர்கள் என்ற தீவிரவாதிகள் என்ற தோற்றை திரைத்துறையினர் உருவாக்கி வருகின்றனர். தங்களது சாதி அடையாளம் மற்றும் சாதி தலைவர்களின் பெயர்களை கூட திரைப்பட கதாபாத்திரங்கள் இடம்பெற்றால் அதற்கு கடும் எதிர்ப்புக்களை சமுதாய அமைப்புகள் தெரிவிப்பதை பார்த்து வருகிறோம்.
ஆனால், இஸ்லாமியர்கள் மட்டும் வெடிகுண்டு, துப்பாக்கி கலாச்சாரத்தில் ஈடுபட்டு நாட்டின் அமைதிக்கும், இறையாண்மைக்கும் எதிராக செயல்படுவது போல தொடர்ந்து திரைப்படங்களில் காட்சிகள் இடம்பெறுவது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. 

2015 பெருவெள்ளத்தின் இஸ்லாமிய அமைப்புகள் செய்த பணிளை யாரும் மறந்துவிட முடியாது. கொரோனா பேரிடரில் உயிரிழந்தவர்களை சொந்தபந்தங்கள் கூட தொட மறுத்த உடல்களை, அடக்க செய்தவர்கள் இஸ்லாமிய அமைப்புகள் இப்படி பேரிடர் என்று வந்துவிட்டால், தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து களத்தில் இறங்கி நிவாரண பணிகளை இஸ்லாமிய இளைஞர்கள் இன்று வரை செய்து வருவதை யாரும் மறுக்கமுடியாது.

உண்மை நிலை இப்படி இருக்கும் போது, இஸ்லாமியர்களை தீவிரவாதியாக பீஸ்ட் திரைப்படத்தில் கதை இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தில் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். இந்த சூழலில், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ள நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ம் தேதி வெளிவந்தால், இஸ்லாமியர்களிடையே ஒரு இணைக்கமான சூழல் ஏற்படும். ஆகவே அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, பீட்ஸ் திரைப்படம் வெளியிட உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் அவர்கள் தடைவிதிக்க வேண்டுமென தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் வலியுறுத்திக் கேட்டு கொள்கிறேன்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola