பப்ஜி என்னும் மிக பிரபலமான விளையாட்டை சட்ட விரோதமாக VPN (virtual private network) முறையில் விளையாடி யூ ட்யூப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர்தான் மதன். ஆபாசம் நிறைந்த பேச்சுகளை பெண்களிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது, அந்தரங்கமாக பேச இன்ஸ்டாகிராம் வர சொல்லி அழைப்பது போன்று பல்வேறு விதமான அத்துமீறல்களில் இவர் ஈடுபட்டுள்ளார். பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கும் நிலையில், 18 வயதிற்கு குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்த பலர் மதனை பின் தொடர்கின்றனர்.


இந்நிலையில் இவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று பலர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் இவரை கைது செய்ய வேண்டும் ஒன்று சிலர் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தச் சூழலில் ட்விட்டரில் தளத்தில் '#ArrestMadhanOP' என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாக தொடங்கியுள்ளது. இதில் பல மக்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






மேலும் இது தொடர்பாக பாடகி சின்மயி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில்,"இந்த நபரை யூடியூப் தளத்தில் 8 லட்சம் பேர் பின்தொடர்ந்துள்ளனர். அத்துடன் இவரது வீடியோக்களை டீன் ஏஜ் நபர்கள் அதிகம் பார்த்துள்ளதாக தெரிகிறது. இது மிகவும் ஆபாத்தான ஒன்று" எனப் பதிவிட்டுள்ளார். அத்துடன் நடிகை காஜல் பசுபதியும் தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான பதிவை செய்துள்ளார். 


 






மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டர் தளத்தில் தற்போது ஒருவர் ஸ்பேசஸ் உரையாடலையும் நடத்தி வருகிறார். அதில் தற்போது பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.