தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 14 ஆயிரத்து 16 நபர்கள் புதியதாக பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தொடர்ந்து 23வது நாளாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 லட்சத்து 74 ஆயிரத்து 247 ஆகும். சென்னையில் மட்டும் இன்று கொரோனாவால் 935 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் 13 ஆயிரத்து 81 நபர்கள் கொரோனா பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் மட்டும் 13 லட்சத்து 78 ஆயிரத்து 385 நபர்கள் ஆவர். பெண்கள் 9 லட்சத்து 75 ஆயிரத்து 298 நபர்கள் ஆவர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர் ஆவர். சென்னையில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து 9 ஆயிரத்து 140 ஆக குறைந்துள்ளது.
இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்கள் 7 ஆயிரத்து 839 நபர்கள் ஆவர். பெண்கள் 6 ஆயிரத்து 177 நபர்கள் ஆவர். தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 25 ஆயிரத்து 895 நபர்கள் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 21 லட்சத்து 74 ஆயிரத்து 247 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்று மட்டும் கொரோனா தொற்று காரணமாக 267 நபர்கள் உயிரிழந்துள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு உயிரிழப்பு 300க்கும் கீழ் குறைந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 187 நபர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள், 80 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், கொரோனாவால் தமிழ்நாட்டில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 547 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7 ஆயிரத்த 826 ஆக பதிவாகி உள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் 69 பேர் எந்தவித பாதிப்பும் இல்லாதவர்கள் ஆவர். தமிழ்நாட்டில் அதிக பாதிப்புகளை கொண்ட கோவையில் இன்று புதியதாக 1,895 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் 36 ஆயிரம் என்ற அளவில் இருந்த தினசரி கொரோனா பாதிப்பு தற்போது ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளால் 14 ஆயிரம் என்ற அளவிற்கு குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் நாளை முதல் டீக்கடைகள் திறப்பு, டாஸ்மாக் கடைகள் திறப்பு உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்ட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : IAS Officers Transfer : 20 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்!