உலகையே உலுக்கி வரும் கொரோனா தொற்று பல்வேறு மாநிலத்தில் குறைந்து வரும் நிலையில் தமிழகத்திலும் படிப்படியாக நோய் தொற்று குறைந்து வருகிறது. தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து ஊரடங்கு உத்தரவு மூலம் நோய்த்தொற்றை குறைக்க நாள்தோறும் முயற்சிகள் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் நாள்தோறும் மாநில சுகாதாரத் துறையின் சார்பாக நோய் தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, சிகிச்சை முடிந்து வீடு திரும்ப எண்ணிக்கை, அதேபோல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அறிவிப்பாக வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் கடந்த 7-ஆம் தேதி தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்களுக்கு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை அறிவித்தது தமிழ்நாடு அரசு . அதைத் தொடர்ந்து நாளை முதல் மீண்டும் ஊரடங்கு உத்தரவு ஒருவார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர பிற 27 மாவட்டத்திற்கு சில, சில தளர்வுகள் அறிவித்து ஊரடங்கு உத்தரவை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள் இன்னும் நோய்த்தொற்று குறையாத மாவட்டங்களாக சுகாதாரத்துறையில் செய்திக் குறிப்பில் உள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று சுகாதாரத் துறையின் சார்பாக வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்று புதிதாக 95 நபர்கள் பெற்று பாதிக்கப்பட்டு உள்ளனர் உள்ள அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கரூர் மாவட்டத்தில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அதேபோல், இன்று கரூர் மாவட்டத்தில் பூரண சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 02 நபர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக நோய்த்தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இன்று கரூரில் பாதிப்பு "இரட்டை இலக்க எண்ணை" தொட்டுள்ளது. இதனால் சற்று மன நினைவுடன் உள்ளனர். மருத்துவர்கள் நாள்தோறும் தீவிர முயற்சியால் தங்களது பணியை செய்து வரும் மருத்துவர்களுக்கு இன்று தொற்று பாதிப்பு எண்ணிக்கை சற்று ஆறுதலை அளிக்கும். இருந்த போதிலும் தமிழ்நாடு அரசு கரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களும் தொற்று பாதிப்பு அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கருதப்படுவதால் மாவட்ட மக்கள் நாள்தோறும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையாக உள்ளது.
மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கரூரில் நாள் தோறும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் காய்ச்சல் முகாமும், அதே போல் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகவே ,தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகள் எடுத்து வரும் நிலையில் அதற்கு பொது மக்களுடைய ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கரூர் மாவட்டத்தில் இதுவரை நோய் தொற்று பாதிக்கப்பட்டு 20,535 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அதைத்தொடர்ந்து, பூரண சிகிச்சை முடிந்து உடல் நலம் பெற்று இதுவரை 18,461 நபர்கள் வீடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் இதுவரை 316 நபர்கள் நோய் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கரூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது வரை சிகிச்சையில் 1,758 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாக இன்று மாநில சுகாதாரத் துறையின் அறிவிப்பு மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை இன்று கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரண்டு இலக்க எண்ணிக்கையில் இருப்பதால் விரைவில் தமிழகத்தில் உள்ள சில சில தளர்வுகளுடன் கூடிய 27 மாவட்டத்தில் போல், கரூர் மாவட்டத்தில் தளர்வுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.