பப்ஜி என்னும் மிக பிரபலமான விளையாட்டை சட்ட விரோதமாக VPN (virtual private network) முறையில் விளையாடி யூடியுப் பக்கத்தில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்பவர்தான் மதன். ஆபாசம் நிறைந்த பேச்சுகளை பெண்களிடம் பேசுவது, தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டே பப்ஜி விளையாடுவது, அந்தரங்கமாக பேச இன்ஸ்டாகிராம் வர சொல்லி அழைப்பது போன்று பல்வேறு விதமான அத்துமீறல்களில் இவர் ஈடுபட்டுள்ளார். பப்ஜி விளையாட்டிற்கு தமிழ்நாட்டில் ஏராளமான பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் அடிமையாக இருக்கும் நிலையில், 18 வயதிற்கு குறைவான டீனேஜ் பருவத்தை சேர்ந்த பலர் மதனை பின் தொடர்கின்றனர்.
மேலும் அறிய :சிறுமிகளிடம் பப்ஜியில் ஆபாச பேச்சு : சிக்கிய ஆன்லைன் கேமர் மதன்! முழுமையான விவரம்...
இந்நிலையில் யூடியுப், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அத்துமீறிய மதனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்கள் கொதித்து வருகின்றன. #ArrestMadhanOP என்னும் ஹாஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
சிறுமிகளிடம் ஆபாச வார்த்தைகளை பயன்படுத்துவதோடு மட்டுமின்றி, தனக்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பவர் குடும்பத்தையும் தகாத வார்த்தைகளால் பேசியதற்கு கண்டனம் தெரிவித்து, சிறையில் அடைக்க வேண்டும் என ட்விட்டர் பதிவு செய்துவருகின்றனர்.
8 லட்சம் பேர் மதனின் யூ டியூப் பக்கத்தை பின்தொடரும் நிலையில், அதில் பெரும்பாலும் ஃபாலோ செய்பவர்கள் பள்ளி மாணவர்களும், மாணவிகளும்தான். அவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவது குறித்து பதிவிட்டுள்ள ஒரு நபர்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் மற்றும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினை டேக் செய்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தல்.
கைது செய்ய வலியுறுத்தல் - #ArrestMadhanOP அதுவே நியாயம் என ஒருவர் கருத்து.
இன்று மாலை ட்விட்டர் ஸ்பேஸஸில் இந்த விவகாரம் குறித்து விவாதம் நடைபெற உள்ளதாக பதிவு செய்துள்ளார்கள்.