அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டுக்கு முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஏபிவிபி அமைப்பினர் சிலர் பொய்யான வீட்டு முகவரியை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இந்த சிக்கலாம் மீண்டும் வழக்குப்பதிவு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.


போராட்டம்..


அரியலூர் மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமெனக் கூறி டெல்லியிலும் தமிழகத்திலும்  ஏபிவிபி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முன்பும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலினின் வீட்டின் முன்பும் சிலர் போராட்டம் செய்தனர். போராட்டத்தின்போது, மாணவியின் மரணத்துக்கு நீதி வேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இந்நிலையில் முதலமைச்சர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் 3 பேர் மைனர் என்பதால் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 29 பேரையும் பிப்ரவரி 28வரை காவலில் வைக்க சென்னை 18வது பெருநகர மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவர்கள் முன் ஜாமின் கோரி வழக்கும் தொடர்ந்துள்ளனர். இது ஒரு புறமிருக்க கைதான 32 பேரில் 12 பேர் பெயரை மாற்றிக்கூறியும், பொய்யான வீட்டு முகவரியைக் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.




Aishwaryaa Rajinikanth | ''இதுதான் காதல்.. ஆமா.. நான் லவ் பண்றேன்..'' - மனம் திறந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்




 




என்ன நடந்தது?


போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வழக்கு வரக்கூடாது என்பதற்காக, தங்களது பெயரை மாற்றிக் கூறியிருக்கின்றனர். அடையாள அட்டையை வைத்து பெயரை பரிசோதிக்காமல் அவர்கள் கூறிய பெயரிலேயே காவல்துறையினரும் அவசர அவசரமாக வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். ஆனால் மாஜிஸ்திரேட் விசாரணையின் போது அவர்கள் பெயரைக்கூறியுள்ளனர். பெயர் மாற்ற சிக்கலால் கோபமடைந்த நீதிபதி போலீசாரிடம் கடுமை காட்டியதாக தெரிகிறது. இதனிடையே வழக்ககறிஞரின் கருத்துக்களைப் பெற்ற காவல்துறை தற்போது மீண்டும் ஒரு புதிய எப்ஐஆர் ஒன்றை பதிவு செய்யலாம் எனத் திட்டமிட்டிருக்கின்றனர். 


இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான ஜாமின் மனு விசாரணை இன்று நடைபெறவுள்ள நிலையில் பெயரையும், விலாசத்தையும் மாற்றி போலீசாரைக் குழப்பினார்கள் என்ற குற்றச்சாட்டை அழுத்தமாகக் கூறி ஜாமினை மறுக்கவைக்க வேண்டுமென போலீசார் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.




New Road Safety rules: இனி குழந்தைகளுக்கும் ஹெல்மெட் கட்டாயம்.. புது விதிமுறைகள் அமல்..




ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண