இரு சக்கர வாகன போக்குவரத்தை மேலும் பாதுகாப்பாக்க, 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இனி ஹெல்மெட் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்திருக்கிறது. குழந்தைகளுடன் பயணம் செய்யும்போது 40 கிலோமீட்டர் வேகத்திற்கு மேல் செல்லக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைகள் அடுத்த ஆண்டு அமலுக்கு வர இருக்கிறது.


2016-ம் ஆண்டு முதல், இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்யும் 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதனை அடுத்து, இந்த ஆண்டு இன்னும் சில விதிமுறைகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில், 9 மாதம் முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இனி ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுவதாகவும், குழந்தைகளோடு பயணம் செய்யும்போது 40 கிலோமீட்டர் வேகத்தை தாண்டக்கூடாது எனவும் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விதிமுறைகளை மீறுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், 3 மாதங்களுக்கு வாகன ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 






இந்த புதிய விதிமுறைகள், 2023 பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வர உள்ளன. புதிய விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதன் மூலம், இரு சக்கர வாகன போக்குவரத்தை மேலும் பாதுகாப்பாக்க முடியும். இதனால், ஓட்டுனரும் உடன் பயணிப்பவர்களும் பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும். மேலும், குழந்தைகளுக்கு ஏதுவான தரத்துடன் கூடிய பிஐஎஸ் சான்றிதழ் கொண்ட ஹெல்மெட்டுகளை அதிக அளவில் நிறுவனங்கள் தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


இந்தியாவில் நாள்தோறும் 30 குழந்தைகள் சாலையோர பயணங்களின்போது ஏற்படும் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இந்த நிலையை மாற்ற, பாதுகாப்பு அம்சங்களை தீவிரப்படுத்துவது முக்கியமாகும். எனவே, புதிய விதிமுறைகளை சரியாக பின்பற்றி விபத்துகளை குறைக்க முன்வருமாறு பொதுமக்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண



Car loan Information:

Calculate Car Loan EMI