திருவள்ளூர் அருகேயுள்ள ஊத்துக்கோட்டையில் ஆசிரமம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நாக தோஷம்..


திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு 20 வயதில் ஹேமமாலினி என்ற மகள் இருந்தார். வயிற்றுவலி மற்றும் கழுத்துவலியால் பாதிக்கப்பட்ட மகளை மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லாமல் மாந்திரீக சிகிச்சைக்கு அழைத்துச் சென்றுள்ளார் அப்பா ராமகிருஷ்ணன். இதற்காக அவர் முனுசாமி என்ற பூசாரியை அணுகியுள்ளார். பூசாரி முனுசாமி ஊத்துக்கோட்டை அருகேயுள்ள வெள்ளாத்துக்கோட்டை என்ற கிராமத்தில் கடந்த 20 வருடமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.


கடந்த ஆண்டு முனுசாமியை சந்தித்த ராமகிருஷ்ணன் தன் மகளுக்கு உடல் பிரச்னை இருப்பதாகவும் சரி செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார். எதுவுமே தெரியாத பூசாரி, ஹேமமாலினிக்கு நாக தோஷம் இருப்பதாகவும் இதனை பூஜை செய்து சரி செய்ய வேண்டுமென்றும் வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார். 




தினமும் பூஜை..


தொடர்ந்து அமாவாசை, பவுர்ணமி அன்று பூஜை செய்து வந்தால் தோஷம் நீங்கிவிடும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பி கல்லூரி படிக்கும் மகளை தொடர்ந்து பூஜைக்கு அழைத்து வந்துள்ளார் தந்தை ராமகிருஷ்ணன்.  நாட்போக்கில் வாரத்துக்கு 2 அல்லது 3 நாட்கள் என ஆசிரமத்திலேயே தங்கி வந்துள்ளார் மாணவி. தொடர்ந்து பூசாரி முனுசாமிக்கு பணிவிடைகளும் செய்து வந்துள்ளார். இதேபோல் கடந்த 13ம் தேதி நள்ளிரவு வரை பூசாரிக்கு பணிவிடை செய்ததாக தெரிகிறது. அடுத்த நாள் காலையில் விஷமருந்தி மாணவி ஹேமமாலினி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.


உடல்நிலை கவலைக்கிடமானதை அடுத்து பெற்றோருக்கு தகவல் கொடுத்த பூசாரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். 


திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார்.  ஆசிரமத்தில் தங்கி இருந்த மாணவி விஷமருந்தி தற்கொலை செய்துள்ள நிலையில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஹேமமாலினியின் பெற்றோர் போலீசில்புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக பென்னலூர் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.    ஆசிரம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.


மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண