தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழ் மொழியில் குடமுழுக்கு நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும் என்று தெய்வீகப் பேரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
பண்டைய காலங்களில் கோயில்களில் குடமுழுக்கு, விழாக்களில் தமிழ் முறைப்படியே நடந்தது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின்படி தமிழ்வழியில் திருக்குட நன்னீராட்டு செய்ய தகுந்த அரசாணையும் பிறப்பிக்க வேண்டும் என்றும் தெய்வீகப் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
தெய்வீக பேரவை சார்பில் முதலமைச்சருக்கு அளிக்கப்பட்டுள்ள கடிதத்தின் விவரம் :
பண்டைய காலங்களில் திருக்கோவில்களின் குடமுழுக்கு, விழாக்கள், பெருவிழாக்கள் அனைத்தும் தமிழ் முறைப்படியே நடைபெற்று வந்துள்ளது.
தமிழ் மன்னர்களின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு வந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்தான் சமஸ்கிருதத்தை வழிபாட்டு மொழியாக சிறிது சிறிதாக மாற்றியுள்ளனர். சங்க காலம் தொட்டு, ஆண்டாண்டு காலமாக மூவேந்தர்கள் காலம் வரையும், தமிழக கோவில்களில் தமிழ்முறைப்படிதான் குடமுழுக்கு விழாக்கள், அன்றாட வழிபாடுகள், பெருவிழாக்கள் ஆகியவை தமிழ் முறைப்படிதான் நடைபெற்று வந்துள்ளன.
சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தமிழகக் கோவில்களில் திருக்குடமுழுக்கு விழாவைத் தமிழ்மொழியில் நடத்துவதற்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
தமிழ் மொழியில் தமிழகக் கோவில்களில் திருக்குடமுழுக்கு நடத்துவதற்கு தகுந்த வழிகாட்டுதல் நெறிமுறைகளையும், தகுந்த அரசாணையையும் பிறப்பிக்க வேண்டும் என தெய்வீக பேரவை கடிதத்தின் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாசிக்க..
மேலும் வாசிக்க..
Ravindra Jadeja: லபுசானே 4 முறை...ஸ்மித் 3 முறை...சொல்லி அடிக்கும் கில்லி...ரவீந்திர ஜடேஜா..!