தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மகா திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா  நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 


 




தென்திருப்பதி என்று அழைக்கப்படும் தான்தோன்றி மலை அருள்மிகு ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் மாசி மகா திருத்தேர் மற்றும் தெப்பத் திருவிழா நிகழ்வை முன்னிட்டு கடந்த மாதம் 24.02.2023 அன்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


 


 


 




 


குறிப்பாக மாசி மாதம் 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றம் நடைபெற்றது. அதை தொடர்ந்து மாசி மாதம் 20-ம் தேதி புதன்கிழமை திருக்கல்யாணம் நடைபெற்றது. மேலும் அதனை தொடர்ந்து மாசி மாதம் 22 ஆம் தேதி திங்கட்கிழமை திருத்தேர் மற்றும் இன்று மாசி மாதம் 24ஆம் தேதி புதன்கிழமை தெப்பத் திருவிழா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு உற்சவர் வெங்கட்ரமண சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிக்கு பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று ஆலய மண்டபத்தில் சுவாமிகளுக்கு பல்வேறு வண்ண மாலைகள் அணிவித்து ராஜ அலங்காரத்தில் காட்சியளித்த கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஸ்ரீதேவி, பூதேவிகள் தெப்ப குளத்திற்கு வந்து அடைந்தார். 


 


 


 


 




 


வானவேடிக்கையுடன் தெப்பத்தில் காட்சியளித்த கல்யாண வெங்கட்ரமண சுவாமி , ஸ்ரீதேவி, பூதேவியுடன் ஐந்து முறை தெப்பத்தை வளவந்த பிறகு மீண்டும் சுவாமி ஆலயம் குடிபுந்தார். ஆலயத்தில் நடைபெற்ற மாசி மாத திருத்தேர் மற்றும் தெப்ப திருவிழாவை முன்னிட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டை ஆலய நிர்வாகி சிறப்பாக செய்திருந்தனர். இன்று நடைபெற்ற மாசி மாத தெப்பத் திருவிழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து தெப்பத் திருவிழாவை கண் குளிர கண்டு ரசித்தனர்.