200 கோடி தடுப்பூசி:
இந்தியாவில், தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள டோஸ்களின் எண்ணிக்கை 200 கோடியை நெருங்கியுள்ளது. தொடக்க காலத்தில் மக்கள் அனைவரும், தடுப்பூசி செலுத்த தயக்கம் காட்டி வந்த நிலையில், தற்போது 200 கோடி நெருங்குவது, இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான கவசத்தை வலுப்படுத்தியுள்ளது.
உலகை அச்சுறுத்திய கொரோனா வைரஸ்:
கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உலக சுகாதார மையத்தால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து உலகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்தது. பின்னர் கொரோனா தொற்றுக்கு இறப்பும் அதிகரித்தது. அதையடுத்து கொரோனா தொற்றுக்கு தடுப்பூசியை கண்டுபிடிக்கும் பணியை உலகத்தில் உள்ள விஞ்ஞானிகள் முடுக்கி விட்டனர். பின்னர் பிரிட்டன், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தடுப்பூசியை கண்டுபிடித்ததாக அறிவித்தன.
தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரிப்பு:
இந்தியாவில் தற்போது கோவிசீல்டு, கோவாக்சின்,ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. மத்திய மற்றும் மாநில அரசுகளின் விழிப்புணர்வால் தடுப்பூசி செலுத்தும் வேகம் அதிகரித்தது. இன்றைய நிலவரப்படி, 199.71 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.
- 12- 14 வயதுக்குட்பட்டோரில் 3.79 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2. 60 கோடி பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- 15- 18 வயதுக்குட்பட்டோரில் 6.08 கோடிக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர் . 5 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- 18 -44 வயதுக்குட்பட்டோரில் 3.79 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 2. 60 கோடிக்கும் அதிகமானோர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- 45 -59 வயதுக்குட்பட்டோரில் 20 கோடிக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 19 கோடிக்கும் அதிகமானோர் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- 60 வயதுக்குட்பட்டோரில் 12.73 கோடிக்கும் அதிகமானோர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். 12.15 கோடிக்கும் அதிகமானோர் 2ஆம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
- இதுவரை 5.43 கோடிக்கும் அதிகமானோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
புதிய சாதனை படைக்கும் இந்தியா:
உலகத்தில் எந்த நாடுகளிலும் இல்லாத எண்ணிக்கையிலும், வேகத்திலும் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில தினங்களில் 200 கோடியை தடுப்பூசி செலுத்தப்பட்டு இந்தியா புதிய சாதனை படைக்க போகிறது.